தங்க பத்திரத் திட்டம்: வருமான வரியை சேமிக்க முத்தான மூன்று டிப்ஸ்கள்

Gold price : இறையாண்மை தங்கப் பத்திரங்களின் 2019-20 தொடர் IV இன்று முதல் சந்தாவுக்காக திறக்கப்பட்டுள்ளது.ஒரு கிராமின் விலை 3,890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் தங்கம்  இறக்குமதியைக்  குறைப்பதற்காக அறிமுகம்  செய்யப்பட்ட திட்டமே இறையாண்மைத் தங்க பத்திரம் திட்டமாகும்  (Sovereign Gold Bond).

தங்கத்தினை வைத்து எப்படி கடன் பெற முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திரத்தினையும் அடைமானம் வைத்து கடன் பெற முடியும். பான் அல்லது ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்றுகளை சமர்ப்பித்து முதலீட்டினை தொடங்கலாம். சவரன் தங்க பத்திரத்தினை மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. சவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் ஆகும் போது திட்டம் முதிர்வடையும்

இறையாண்மை தங்கப் பத்திரங்களின் 2019-20 தொடர் IV இன்று முதல் சந்தாவுக்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிராமின் விலை  ரூ.3,890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை சந்தாவில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 தள்ளுபடி வழங்குகிறது. டிஜிட்டல் மூலம் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இந்திய அரசு.

இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள்:

  1. அரையாண்டின் போது 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டும் விஷயம் என்னவென்றால், வட்டி வருவாயில் டீடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
  2. சவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் ஆகும் போது திட்டம் முதிர்வடையும். முதிர்வு வரை நீடித்திருந்தால் கேபிட்டல் டேக்ஸ்  போடப்பட மாட்டாது. இந்த அம்சம் பிரத்தியோகமான விஷயமாகும் . தங்கம் ETF  மற்றும் தங்கம்  பரஸ்பர நிதி திட்டத்தில் இல்லை என்பதை நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் .
  3. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கல் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம்.
  4. இந்த இரண்டிலும்  கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close