சுவையான சோயா பீன்ஸ் தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் – 2 கப்
கேரட் – 1
முள்ளங்கி – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
அரிசி மாவு – 4 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கேரட், முள்ளங்கியை துருவிக் கொள்ளவும். சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் இந்த மாவு கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேக விடவும். இருபுறமும் வெந்ததும் சூடான பரிமாறலாம். அவ்வளவு தான் ஹெல்தியான சோயா பீன்ஸ் தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“