Advertisment

சோயா பீன்ஸ், கேரட், முள்ளங்கி: இப்படி ஒரு தோசை நிச்சயம் ட்ரை செய்திருக்க மாட்டீங்க; செய்து பாருங்க

சோயா பீன்ஸ் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Soya beans
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவை, ஆரோக்கியமான சோயா பீன்ஸ் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.  

Advertisment

சோயா பீன்ஸ் – 2 கப்

கேரட் – 1

முள்ளங்கி – 1

வெங்காயம் – 1

தக்காளி – 1

அரிசி மாவு – 4 ஸ்பூன்

இஞ்சி – தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 4

சீரகம் – 1 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை  

முதலில் கேரட், முள்ளங்கியை துருவிக் கொள்ளவும். சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

இப்போது மிக்ஸி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, இப்போது மாவு ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். தோசை வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியமான சோயா பீன்ஸ் தோசை தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment