சுவையான மீல்மேக்கர் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 1/2 கப்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 8 பல்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 8
உப்பு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து அதில் மீல் மேக்கரைப் போடு வேக விடவும்.
பின் அதை எடுத்து தண்ணீர் பிழிந்து வைக்கவும். அடுத்து தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது மீல் மேக்கர் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அவ்வளவு தான் சுவையான மீல்மேக்கர் கிரேவி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“