சுவையான மீல் மேக்கர் குருமா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் – 1 கப்
பட்டாணி – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
சீரக தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
உப்பு – 3/4 ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை நறுக்கி கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து எடுக்கவும். மீல் மேக்கரையும் சுடு நீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். மேலும், மஞ்சள் தூள், சீரகத் தூள், தனியாத் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மீல் மேக்கர் குருமா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“