சுவையான மீல்மேக்கர் மசாலா/கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 1/2 கப்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 8 பல்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 8
உப்பு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் 3 கப் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். சிறிது நேரம் ஊற விடவும். ஊறிய பின் அதை பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும். தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். இப்போது அதை நன்கு கிளறி மசாலா சேர்ந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சத்து நிறைந்த
மீல்மேக்கர் மசாலா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“