வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்வு அதிகரிக்கிறதா? கவலையை விடுங்க... இந்த ஒரு பொருள் போதும்: கன்னிகா சினேகன்
வெயில் காலத்தில் நம் முடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என கன்னிகா சினேகன் சூப்பரான ஹேர் கேர் டிப்ஸை தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெந்தயத்தை மட்டும் வைத்து இந்த ஹேர் பேக்கை தயாரிக்கலாம்.
காலநிலை மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அந்தந்த சூழலுக்கு ஏற்ப நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டால் தான் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இந்த செயல்முறை முடி பராமரிப்பிற்கும் பொருந்தும்.
Advertisment
குறிப்பாக, வெயில் காலத்தில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை கூடுதலாக இருக்கும். அதிகப்படியான உஷ்ணம் மற்றும் வியர்வையின் தாக்கத்தில் முடி வறட்சித் தன்மையுடன் காணப்படும். இதுவே வெயில் காலத்தில் அதிகமாக முடி உதிர்வதற்கான காரணங்கள்.
இந்த நேரத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். அதேபோல், முடியையும் வெயில் காலத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இப்படி செய்தால் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
முடி பராமரிப்பு என்றதும் வேறு ஏதேனும் ஷாம்பு, ஹேர் சீரம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஒரே ஒரு பொருளைக் கொண்டு வெயில் காலத்திற்கு ஏற்ற ஹேர்பேக் ஒன்றை தயாரிக்கலாம் என கன்னிகா சினேகன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து சிறிதளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் என கன்னிகா சினேகன் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள் காலை எழுந்ததும், ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். இப்படி செய்தால் நமக்கு தேவையான சிம்பிளான ஹேர் பேக் ரெடியாகி விடும்.
இந்த ஹேர்பேக்கை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவிக் கொள்ளலாம். இதன் பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இப்படி செய்யும் போது உஷ்ணம் தணிந்து முடிக்கு தேவையான குளிர்ச்சி தன்மை கிடைத்து விடும்.
நன்றி - Hair Cares & Styles Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.