Advertisment

கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம்: ’பலரின் உயிரை காக்கும்’: காவல்துறை தலைவர் சுதாகர்

கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்

கோவையில்  துவங்கப்பட்டுள்ள  கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்..

Advertisment

கல்லீரல் செயல் இழப்பு என்பது இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இளம் தற்கொலையினால் உயிர் இழக்கும் பெரும்பாலோனோர் விஷம் அருந்தியே உயிரிழக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணமாக விஷம் அருந்தியவுடன் ஏற்படும் கல்லீரல் பாதிப்பையே மருத்துவர்கள் காரணமாக கூறுகின்றனர்.

இந்நலையில் மேற்கு தமிழகத்திலேயே முதன் முறையாக  கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து  நோய்களையும் குணப்படுத்துவது,மற்றும்  மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான  பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.

இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் நல்லா.ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில்,  பிரத்யேக கல்லீரல் செயல் இழப்பு பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்  துவக்கிவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,இதில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல்பவர்களை காப்பாற்றுவதில் பெரும் சவாலாக உள்ள கல்லீரல் சிகிச்சையில், கோவையில்  துவங்கப்பட்டுள்ள  கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment