ஹோலி பண்டிகை எதிரொலி: கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில்; ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
kanyakumari to telangana special train for summer holidays Tamil News

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Advertisment

அதன்படி மும்பை சத்ரபதி சிவாஜி  டெர்மினல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (01005) மும்பையில் இருந்து மார்ச் 10 மற்றும் 17 ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் சிறப்பு ரயில் (01006) கன்னியாகுமரியில் இருந்து மார்ச் 11 மற்றும் 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 04.15 மணிக்கு மும்பை சென்று சேரும். 

இந்த ரயில்கள் தாதர், தானே, கல்யாண், லோனாவாலே, புனே, டௌன்ட், சோலாப்பூர், கலாபர்கி, வாடி, கிருஷ்ணா, ரெய்ச்சூர், மந்திராலயம் ரோடு, அடோனி, குண்டக்கல், கூட்டி, தாடி பத்திரி, எர்ரகுண்ட்லா, கடப்பா, ராஜம்பேட்டா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

Advertisment
Advertisements

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

holi Special Trains

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: