விந்தணு பரிசோதனை: வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க: டாக்டர் யோக வித்யா யோசனை
வீட்டிலேயே விந்தணு பரிசோதனை எப்படி செய்ய வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் விந்தணுவின் தரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
வீட்டிலேயே விந்தணு பரிசோதனை எப்படி செய்ய வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் விந்தணுவின் தரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
ஆண்களை பொறுத்தவரை அவர்களது விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். திருமணமாகி குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் தம்பதியினர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்களின் விந்தணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
Advertisment
எந்த அளவிற்கு ஒரு ஆணின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். இதற்காக விந்தணுக்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, திருமணத்திற்கு முன்பாகவே விந்தணுக்களை பரிசோதனை செய்து கொண்டால், அதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்பட்சத்தில், அந்தப் பிரச்சனையை சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
அந்த வகையில் விந்தணுக்கள் பரிசோதனை தொடர்பாக ஆய்வுக் கூடங்களுக்கு செல்வதற்கு முன்பாக வீட்டிலேயே எளிமையான முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதன் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விந்தணுவை ஒரு கிளாஸ் நீரில் போடும் போது, அவை நேராக தண்ணீரின் அடிப்பகுதிக்கு சென்றால் அவை ஆரோக்கியமாக இருக்கிறது என்ற அர்த்தம் என மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த விந்தணு விரைவாக கரைந்து தண்ணீரின் மேற்பகுதியில் மிதந்தால், அது ஆரோக்கியமாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
உதாரணமாக, நல்ல முட்டையை தண்ணீரில் போட்டால் அது தண்ணீரின் அடிப்பகுதிக்கும் சென்று விடும். இதுவே கெட்டுப் போன முட்டையாக இருந்தால், அது தண்ணீரில் மிதக்கும். இதே முறை தான் விந்தணு பரிசோதனையிலும் இருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார்.
எனினும், விந்தணுக்களின் ஆரோக்கியம் குறித்து அறிவியல்பூர்வமான தகவல்களை பெற விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு சென்று சோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் விந்தணுக்கள் குறித்த தகவல்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.