ஸ்பைஸ்ஜெட்டின் புது விமானங்கள்: சென்னைக்கான விமான சேவைகள் அதிகரிப்பு

Spicejet New flights: கொல்கத்தா-சென்னை மற்றும் சென்னை-ஷிர்டி ஆகிய உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது ஸ்பைஸ்ஜெட்

TN Live Updates : Narendra Modi Us Trips

மிகவும் குறைந்த விலையில் விமான சேவை வழங்கும் நிறுவனம் எனப் பெயரெடுத்த ஸ்பைஸ்ஜெட் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களை விரிவுபடுத்த ஆறு புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

கொல்கத்தா-பாங்காக்-கொல்கத்தா வழித் தடங்களில் எங்கும் தரை இறங்காமல் செல்லும் தனது இரண்டாவது விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொல்கத்தா-பாங்காக் விமான சேவையில் மிகப்பெரிய லாபம் இருப்பதாலும், இது மற்ற இந்திய நகரங்களில் இருந்து கொல்கத்தா வழியாக பாங்காக் செல்லும் பயணிகளையும் இணைப்பதாலும் இந்த முயற்சியில் ஸ்பைஸ்ஜெட்  இறங்கியுள்ளது.

கொல்கத்தா-சென்னை மற்றும் சென்னை-ஷிர்டி ஆகிய உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது ஸ்பைஸ்ஜெட். இதனால், கொல்கத்தா-சென்னை- ஷிர்டி போன்ற வழிகளில் நல்ல முறையில் சேவை  அளிக்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் நம்புகிறது.

ஸ்பைஸ்ஜெட் தனது போயிங் 737-800 தான் இந்த வழித் தடங்களில் பயன்படுத்தப் போகிறது .

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spicejet flights introduced new six flights spicejet chennai shirdi chennai kolkatta

Next Story
Ganesh Chaturthi 2019: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை இந்த புகைப்படங்களுடன் நண்பர்களுக்கு பகிருங்கள்…ganesh chaturthi 2019, vinayak chaturthi, vinayagar chaturthi, ganesh chaturthi wishes, ganesh chaturthi messages, ganesh chaturthi quotes, ganesh chaturthi sms, ganesh chaturthi status, ganesh chaturthi images, ganesh chaturthi wallpaper விநாயகர் சதுர்த்தி நேரம், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express