காரமான உணவை உட்கொள்வது இதயத்திற்கு நல்லது என்று இதயநோய் நிபுணர் கூறுகிறார்.
மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள் இதய ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.
இதுகுறித்து ஹைதராபாத்தின் கேர் மருத்துவமனைகள் ஹைடெக் சிட்டியின் ஆலோசகர் இருதயநோய் நிபுணர் டாக்டர் வினோத்தின் கூற்றுப்படி, காரமான உணவை வழக்கமாக உட்கொள்வதற்கும் மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. உண்மையில், காரமான உணவுகளை மிதமாக உட்கொள்வதால் அதில் உள்ள கேப்சைசின் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அளிக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க:
Eating spicy food might be good for your heart, says cardiologist
காரமான உணவின் நன்மைகள்:
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள்: மிளகாய், மிளகுத்தூளில் வெப்பத்திற்கு காரணமான கேப்சைசின் என்ற பொருள் உள்ளதால் அது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும், இவை இரண்டும் இதய நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேம்பட்ட வளர்சிதை மாற்றம்: கேப்சைசின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இது எடை நிர்வாகத்திற்கு உதவும் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
சாத்தியமான இரத்த அழுத்தம் குறைப்பு: சில ஆய்வுகள் கேப்சைசின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்று கூறுகின்றன.
தீமைகள்:
காரமான உணவு சாத்தியமான நன்மைகளை வழங்கும் அதே வேளையில், அதை மிதமாக உட்கொள்வது முக்கியம். மிகவும் காரமான உணவுகளை அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும். இது மறைமுகமாக இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
தற்போதுள்ள இதய நிலைகள் அல்லது உணர்திறன் வாய்ந்த செரிமான அமைப்புகளைக் கொண்ட நபர்கள், காரமான உணவை உட்கொள்வதற்கு முன்பு தங்களது மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
உணவில் காரமான மசாலாவை சேர்ப்பதற்கு சில வழிமுறைகள்:
லேசான முதல் மிதமான மசாலாப் பொருட்களைத் தேர்வுசெய்க: திடீரென உணவில் காரத்தை அதிகரிக்க நினைப்பவர்கள் பெல் பெப்பர்ஸ், மிளகு மற்றும் வாழை மிளகுத்தூள் போன்ற மசாலாப் பொருட்களை சாப்பிடலாம். அவை அதிக வெப்பம் இல்லாமல் சுவையை வழங்கும்.
அழற்சி எதிர்ப்பு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தவும்: மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு போன்ற மசாலாப் பொருட்களை முதலில் சமையலில் சேர்க்கவும்.
குளிரூட்டிகளுடன் சமநிலை: செரிமான மண்டலத்தை ஆற்றுவதற்கு தயிர், வெண்ணெய் அல்லது வெள்ளரி போன்ற குளிர்ச்சியான பொருட்களையும் சேர்த்து காரமான உணவுகளுடன் சாப்பிடலாம்.
நீரேற்றமாக இருங்கள்: இதுமாதிரி காரமான உணவுகளை எடுத்து கொள்ளும்போது அதிக தண்ணீர் குடிப்பது செரிமான கோளாறுகளை உண்டாக்காது.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் முன்னிரிமை அளிக்கலாம். அதேசமயம் காரமான உணவுகளையும் தைரியமாக உண்ணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“