Spicy Vatha Kuzhambu Recipe Tamil : ஹோட்டல் ஸ்டைலில் பார்ப்பரியமான வத்தக்குழம்பு இந்த முறையில் செய்து பாருங்கள். காரசாரமான இந்தக் குழம்பு உங்கள் தினசரி குழம்புகளிலிருந்து வித்தியாச ருசியைத் தரும். நூறு சதவிகித பாராட்டு நிச்சயம்.
புளி ஊறவைக்க :
1 எலுமிச்சை அளவிலான புளி அல்லது 1 டேபிள்ஸ்பூன் இறுக்கமாக நிரம்பிய புளி
1 கப் சுடுதண்ணீர்
வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வத்தல் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய், உடைந்த மற்றும் விதைகள் நீக்கப்பட்டது - 1 முதல் 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
சாம்பார் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
வெல்லம் - ½ டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
புளி ஊறவைக்க செய்முறை :
ஒரு கிண்ணத்தில் 1 எலுமிச்சை அளவிலான புளி அல்லது 1 டேபிள்ஸ்பூன் இறுக்கமாக நிரம்பிய புளி எடுத்து, அதனை 1 கப் சூடான நீரில் ஊறவைக்கவும். 20 முதல் 30 நிமிடங்கள் இதனை மூடி ஊற வைக்கவும். பிறகு, புளியை பிழிந்து கரைசலை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும்.
வத்தக்குழம்பு செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு, வெப்பத்தை குறைத்து, கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், வெந்தயம், உலர்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
சிவப்பு மிளகாய் நிறம் மாறும் வரை வறுக்கவும் பிறகு நன்கு கிளறவும்.
இதில் இப்போது, மனதக்காளி வத்தல் சேர்க்கவும்.
இந்தக் கலவையை நன்கு கிளறி, மணத்தக்காளியின் நிறம் மாறும் வரை சில நொடிகள் வறுக்கவும்.
இப்போது வெப்பத்தை அணைத்து, சாம்பார் தூள் சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை வறுக்கவும்.
இதில் இப்போது புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து வத்தக்குழம்பை சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் நடுத்தர-குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
கிரேவி அளவிற்கு கெட்டியாகும் வரை தொடர்ந்து கலந்து விடவும்.
பிறகு அரிசி மாவு மற்றும் வெல்லம் சேர்க்கவும். இந்த இரண்டும் சேர்ப்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்தான்.
இது சேர்த்தபிறகு வத்தக்குழம்பை 4 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும். சுவை சரிபார்த்து உப்பு சேர்த்துக்கொள்ளலாம். சூடான சாதத்தோடு சுவையான வத்தக்குழம்பை பரிமாறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"