/indian-express-tamil/media/media_files/2025/04/21/yWxdOueljlcIBmwU3eUw.jpg)
Spider
கோடை காலம் நெருங்கி வருவதால், பூச்சிகளும், புழுக்களும் அதிவேகமாகப் பெருகி வருகின்றன. வெப்பம் அதிகரிப்பதால், சிலந்திகளைப் பார்ப்பதும் அதிகரிக்கிறது. சமையலறையிலும் அதைச் சுற்றியும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வது, ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானதாகும்.
இது ஏன் நடக்கிறது, இதை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி அறிய, இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம், பூச்சி கட்டுப்பாட்டு நிபுணரை தொடர்பு கொண்டது.
இந்திய பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (India Pest Control Company) தீபக் ஷர்மாவுடன் நடத்திய உரையாடலில், வெப்பமான வானிலை பூச்சிகளின் அதிகரிப்பைக் குறிக்கிறது, இதன் விளைவாக சிலந்திகளுக்கு அதிக உணவு கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். "அவை கோடையில் பெருகும் ஈக்கள், கொசுக்கள் மற்றும் எறும்புகளை வேட்டையாடுகின்றன. மேலும் இது பெரும்பாலான சிலந்தி இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். எனவே, அவை துணையைத் தேடி நகர்கின்றன. மேலும், வறண்ட வெப்பம், சிலந்திகளை வீடுகளுக்குள் குளிர்ச்சியான, இருண்ட இடங்களுக்குள் விரட்டுகிறது”, என்று ஷர்மா கூறினார்.
சிலந்திகளை ஏன் உடனடியாகக் கொல்லக்கூடாது?
சிலந்திகள் இயற்கையின் பூச்சி கட்டுப்பாட்டு முகவர்கள் என்று ஷர்மா கூறுகிறார் - அவை நோய்களை அகற்ற உதவுகின்றன. ஒரு சிலந்தி தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பூச்சிகளை உண்ணும். ஓநாய் சிலந்தி (wolf spider) போன்ற சில இனங்கள் தங்கள் முட்டைகளை முதுகில் சுமந்து செல்கின்றன, அவற்றை அடித்துக் கொல்வதால், அவை அதிகமாக பரவுகின்றன. மேலும், அவற்றில் பெரும்பாலானவை, குறிப்பாக நம் வீடுகளில் காணப்படும் சிலந்திகள், பாதிப்பில்லாதவை மற்றும் நம்மைத் தொடுவதைத் தவிர்க்கின்றன.
"நீங்கள் சிலந்திகளைப் பார்த்தால், அங்கு மற்ற பூச்சி தொல்லைகள் உள்ளன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவை பிரச்சினைக்கான ஆதாரம் அல்ல, தீர்க்கப்பட வேண்டிய பெரிய பிரச்சினையின் அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் கூறினார்.
அவற்றை எப்படி அகற்றுவது?
"தொல்லை வேண்டாம் என்றால், அவற்றைப் பிடித்து வெளியே விட்டுவிடுங்கள். ஜன்னல் இடைவெளிகள், கதவு ஓரங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத காற்றோட்ட வழிகளை சரிசெய்யுங்கள் அல்லது பெப்பர்மின்ட் ஆயில் அல்லது சிட்ரஸ் ஸ்ப்ரே போன்ற இயற்கை விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்," என்று ஷர்மா பரிந்துரைத்தார்.
Read in English: Why you should not kill spiders on the spot
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us