/indian-express-tamil/media/media_files/2025/10/29/kitchanhd-2025-10-29-17-05-19.jpg)
டிஜிட்டல் பிரபலம் சஷாங் அரோரா சமையலறையில் விரைவான வழிமுறைகளைப் பகிர்வதில் பிரபலமானவர். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு குறிப்பு, தற்செயலாக எண்ணெய் கசிந்தால் அதைச் சரிசெய்வதற்கான ஓர் எளிய வழியை பற்றி கூறியிருந்தார். அவர் தனது பதிவின் தலைப்பில், "சமையலறையில் எண்ணெய் கசிந்துவிட்டதா? உடனே டிஷ்யூ பேப்பரைத் தேடாதீர்கள். டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தினால் கசிவு மேலும் மோசமாகி, எண்ணெய் பரவிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அதற்குப் பதிலாக அவர் பரிந்துரைக்கும் எளிய வழிமுறை என்னவென்றால், எண்ணெய் கசிவின் மீது உப்பைத் தாராளமாகத் தூவவும். உப்பு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும் வரை காத்திருக்கவும். பிறகு டிஷ்யூ அல்லது துணியால் அதைத் துடைக்கவும். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லை, கறைகளும் இல்லை. இது வழக்கமான முறையை விட விரைவானது, எளிதானது, மற்றும் மிகவும் சுத்தமானது" என்று தெரிவித்துள்ளார்.
சுத்தமான சமையலறைக்கான மற்ற குறிப்புகள்
ஹிப்கௌச் (Hipcouch) நிறுவனத்தின் இணை நிறுவனர் பங்கஜ் போத்தர், சமையலறையை எப்போதுமே கறைகள் இல்லாமல் சுத்தமாகப் பராமரிக்க சில உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்:
சுத்தம் செய்தல் (Cleaning): சமையலறையின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தைக் கண்காணிப்பது மிக முக்கியம். எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய கிளீனர்களைப் பயன்படுத்தித் தெளித்து, பின்பு உலர்ந்த துணியால் துடைக்கவும். சமையலறை மேடை மற்றும் தொட்டியைத் (sink) தொடர்ந்து சுத்தம் செய்வது, பராமரிப்பு வேலையின் சிரமத்தைக் குறைக்கும்.
கழிவு மேலாண்மை (Waste Management): சமைக்கும்போது நிறையக் கழிவுகள் (ஈரமான மற்றும் உலர்ந்த) உருவாகும். கழிவு மேலாண்மையைச் சரியாக வைத்திருப்பது அவசியம். குப்பைத் தொட்டி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் துர்நாற்றத்தையும் பரப்பலாம். ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகளுக்குத் தனித்தனி தொட்டிகள் வைத்திருப்பது, கழிவுகளை எளிதாக அகற்றுவதுடன் சமையலறையின் சுகாதாரத்தையும் பேண உதவும்.
காலியான தொட்டிகளே சிறந்தது (Empty Sinks): சமையலறைத் தொட்டியை (sink) எப்போதும் காலியாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள். இது சமைக்கும் போது காய்கறிகளைக் கழுவ அதிக இடம் அளிக்கிறது, மேலும் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் குறைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us