சிம்பிள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கீரை தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளிக்காத புது தயிர் – 1 கப்
முளைக்கீரை – அரை கட்டு
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கீரை, ஏதாவது உங்களுக்குப் விருப்பமான கீரை கூட எடுத்துக் கொள்ளலாம். கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரையுங்கள். குக்கரில் அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கிய கீரையை சேர்த்து வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். இப்போது கீரை ஆறி இருக்கும், கடுகு தாளித்ததை அதனுடன் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவை , ஆரோக்கியம் நிறைந்த கீரை தயிர் பச்சடி ரெடி.