கீரை முதல் கேரட் வரை… விட்டமின் உணவுகளை சாப்பிடும் நேரம் முக்கியம்!

கீரை முதல் முட்டை வரை: சமையல் அறையிலேயே சத்தான உணவுகள்

Chennai residents can now order vegetables, fruits on Swiggy, zomato cmda

நம் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ரகசியம் செயற்கையாக கிடைக்கும் புரதப் பவுடர்களில் இல்லை. அதேவேளையில் உடல்நலன் மீதான அக்கறையில் சப்ளிமண்ட்ஸ் எனப்படும் துணைப்பொருளை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை நாம் கருத்தில் கொள்வதில்லை.நமது சமையலறையிலேயே ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகள் ஏராளம் உள்ளன. அவைகளில் நார்ச்சத்து , கொழுப்புகளற்ற நுண்ணிய ஊட்டச்சத்துகள் நிறைய உள்ளது. மேலும், அதிக அளவு புரதம் மற்றும் உடல் செல்களை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.நமது உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு சமையலறையிலுள்ள இது போன்ற உணவுப் பொருள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

கீரைகள்:

ஆரோக்கியமான உணவில் கீரைவகைகள் முதலிடத்திலுள்ளன. நார்ச்சத்து நிறைந்தது மட்டுமல்லாமல், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி, பீட்டா காரோடீன் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தவை.

ஆப்பிள்:

உயர்தர நார்ச்சத்து, வைட்டமின் சி, மற்றும் உடல் செல்களை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆப்பிளில் அதிகம் உள்ளன. நாள்தோறும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதன் மூலம் மருத்துவரைத் தவிர்க்கலாம். காலை உணவுக்கு பிறகு அல்லது மதிய உணவுக்கு முன்பு ஆப்பிளை உணவாக எடுத்துக்கொள்வது உகந்தது.

பூண்டு:

பூண்டு பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உணவில் அதிக அளவிலான நுண்ணூட்டச்சத்துகள் வழங்குபவையாக உள்ளது பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்டான அல்லிசீன் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கிறது.

மஞ்சள்:

மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் இயக்கம் சீராகும். மஞ்சளில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டான கர்குமின் புற்றுநோயைக் குறைப்பதுடன், இதய நோய், அல்சைமர் நோய், வாதம் மற்றும் மனச்சோர்வுக்கு சிறந்த எதிர்வினையாக உள்ளது.

அவகேடோ பழங்கள்:

அவகேடோ பழங்கள் கொழுப்புகளற்ற புரதச்சத்து பெறப்படும் கீட்டோ டையட் முறையில் பயன்படுகிறது. கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும் உணவு முறைக்கு கீட்டோ டயட் எனப்பெயர். இயற்கையாகவே குறைந்த அளவிலான இனிப்பு சுவை உடையது இதன் தனித்தன்மை. சாலட், பிரட் போன்ற டயட் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கோழிக்கறி:


எலும்புகளற்ற கோழிக்கறியில் 31 கிராம் புரதம் உள்ளது. ஆரோக்கிய உணவின் பட்டியலில் இதனால் கோழிக்கறியும் இடம்பெற்றுள்ளது. உடலுக்கு நாள்தோறும் தேவைப்படும் புரதத்தில் 50 சதவிகிதம் கோழியில் கிடைக்கிறது. இதை முழு உணவாகவோ அல்லது சூப், சாலட் போன்ற துணை உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டை:

முட்டை அனைத்து விதங்களிலும் சீரான உணவு. இதில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் அமிலோ அமிலங்கள் உள்ளன. முட்டையில் உள்ள மஞ்சள் கரு ரத்தக்கொழுப்பிற்கு காரணமில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை உணவாக முட்டையை எடுத்துக்கொள்வது உகந்தது.

கேரட்:

கேரட் முழு உணவாகவோ, சாலட் போன்ற துணை உணவாகவோ எடுத்துக்கொள்ளப்படுகிறது. கீரையில் உள்ள பீட்டா கரோட்டீன் இதில் அதிகம் உள்ளது. அதிக அளவில் வைட்டமின் எ உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமான உணவு பொருளாகும். இதில் ஃபைபர், பொட்டாசியம், இரும்பு, காப்பர், ப்ரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கே, சி, சத்துக்கள் நிறைந்துள்ளது. ப்ரோக்கோலியை சாலட் முதல் சூப் வரை, அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய்:

இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதனை தினசரிஅதிகாலை உட்கொள்வது சிறந்தது.

தயிர்:

தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தைத் தூண்டுகிறது. ஆனால் இரவு நேரங்களில் தயிரைத் தவிர்ப்பது நல்லது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

நட்ஸ்:

நட்ஸ் வகைகளில் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், மக்காடமியா போன்ற வகைகளில் நிறை சத்துக்கள் நிறைந்துள்ளது.இவற்றை பகல் நேரங்களில் பசிக்கும்போது சாப்பிடலாம்.

ஆளிவிதை:

இவை மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை, இது இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். உலர்ந்த வறுத்த ஆளி விதை தூள்களை பருப்பு, சூப், சாலட் மற்றும் மோர் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய்:

உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அழிக்கும் பண்புகள் இதில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரும பாதுகாப்பிற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

பேரீச்சை பழங்கள்:

உடனடி ஆற்றலைப் பெறுவதற்கு பேரீச்சை சிறந்த உணவாகும். அதிக அளவிலான இரும்பு சத்துகள் இதன் தனித்துவமாகும். உடலில் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கத்தைத் தடுக்க பேரீச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது. உடற்பயிற்சிக்கு முன்பும் பேரீச்சையை எடுத்துக்கொள்வது உகந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spinach to egg healthy foods in your kitchen

Next Story
சட்டென ரெடியாகும் கலக்கல் கதம்ப சாம்பார்!Simple Sambar Recipe Easy Lunch Recipes Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com