Split ends simple and effective tips to get rid of Tamil News : மாசு மற்றும் தூசியினால் கூந்தல் அதிகமாக சேதமடையும். அதனால் நிறையப் பேர், கூடுதல் கூந்தல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்த முயற்சி செய்வதுண்டு. ஆனால், அவை முடியை மந்தமாகவும் உயிரற்றதாகவும் மாற்றும். இதன் மற்றொரு பொதுவான விளைவு ஸ்ப்ளிட் எண்ட்ஸ் அதாவது நுனி முடி வெடிப்பு. நம் தலைமுடிக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காமல் போகும்போது, இதுபோன்ற பிரச்சனை நிகழ்கிறது.
பெரும்பாலும், நாம் இந்த முடி வெடிப்புகளைக் காணும் போதெல்லாம் ட்ரிம் செய்வதுண்டு. இருப்பினும், இந்த பிரச்சனையைச் சமாளிக்க, நாம் சில முடி பராமரிப்பு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.
*உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது அதனை மிகவும் மென்மையாகப் பராமரியுங்கள்.
*உங்கள் தலையைத் துடைக்க ஒரு பழைய காட்டன் சட்டை அல்லது பருத்தி துண்டு பயன்படுத்தவும். சரும மருத்துவர்களின் கூற்றுப்படி, இது எப்போதுமே கூந்தலுக்கு சிறந்ததாகவும் கடுமையற்றதாகவும் இருக்கிறது.
*உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது, பரந்த பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்தித் தலைவாருங்கள். முடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் ப்ரஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
*ஒவ்வொரு முறை தலைமுடியைக் கழுவிய பிறகும் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இது, அதிக முடி உதிர்தலை ஏற்படுத்தாது.
*நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். நன்கு அலசிய கூந்தலில் ஹேர் மாஸ்க் போடலாம். சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பிறகு நீங்கள் இந்த ஹேர் மாஸ்கை கழுவலாம்.
*ஹீட்டர், ப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அப்படியே பயன்படுத்தினாலும் ஹேர்டிரையர் மற்றும் ஸ்ட்ரெய்ட்னெர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களைக் குறைந்தபட்ச சூட்டில் வைத்துப் பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil