பஞ்சு போல் இடியாப்பம் செய்ய, இந்த ஸ்டெப்ஸை பின்பற்றுங்க.
தேவையான பொருட்கள்
3 டம்ளர் தண்ணீர்
2 டம்ளர் அரிசி மாவு
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
உப்பு
செய்முறை: அரிசி மாவில், எண்ணெய் சேர்க்கவும். அதில் கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கிளரவும். தற்போது இடியாப்பம் குழலில் சேர்த்து வட்டமான தட்டில் இடியாப்பம் பிழியவும். தொடர்ந்து இதை இட்லி பாத்திரத்தில் சேர்த்து மூடி வேக வைக்கவும். 15 நிமிடங்களில் பஞ்சு போல இடியாப்பம் ரெடி. அதற்கு மேலாக துருவிய தேங்காய் சேர்க்கவும்.