ஒரு முறை இப்படி ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் பீன்ஸ் பொறியல் செய்து சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
கால் ஸ்பூன் வெந்தயம்
அரை ஸ்பூன் சீரகம்
பட்டை 2
பச்சை மிளகாய் 3
பூண்டு 4
200 கிராம் பீன்ஸ்
¾ கப் வெங்காயம் நறுக்கியது
அரை கப் தேங்காய் பால்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
கறி மசாலா பொடி 1 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, வெந்தயம், சீரகம், பட்டை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து பீன்ஸை நீளமாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கிளரவும், மஞ்சள் பொடி, கறி மசாலா பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் பால் சேர்த்து கிளர வேண்டும். 10 நிமிடங்கள் வேக விடவும்.