ஸ்ரீராம நவமி: உங்கள் குழந்தைகளை ஸ்ரீராம ஜெயம் எழுதச் சொன்னீர்களா?

Sri rama navami Importance: குழந்தைகள் ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்கினால், கல்வியில் ஞானமும் புத்தியில் தெளிவும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

ஸ்ரீராமர் அவதரித்த தினமான இன்று ஸ்ரீராமஜெயம் எழுதி பிரார்த்தனை செய்தால், குழப்பங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம்.

கோடிக்கணக்கான பக்தர்களின் இதய நாயகன் ஸ்ரீராமபிரான் அவதரித்த தினம் இன்று (13-ம் தேதி). இந்தநாளில் அருகில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பலவித நன்மைகளைத் தந்தருளும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

sri rama navami, ramnavami 2019, ஸ்ரீ ராமர் பிறந்த நாள்

Sri rama navami Importance: ஸ்ரீராமர் அவதரித்த தினம்

மன்னார்குடி அருகில் உள்ள வடுவூர் ராமர் கோயில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில் முதலான பல ஆலயங்களிலும் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ராமநவமியையொட்டி வீட்டில் விளக்கேற்றி, ராமருக்கு பால்பாயசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ராம நாமம் சொல்லி வேண்டிக்கொண்டாலும் சுபிட்சம் நிலவும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

இன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலையில் குளித்துவிட்டு, பூஜையறையில் சுவாமி படத்துக்கு எதிரே அமர்ந்துகொண்டு மனம் ஒருமித்த நிலையில் பக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவார்கள். 108 முறை அல்லது 1008 முறை என இயன்ற அளவு ஸ்ரீராமஜெயம் எழுதுவது வழக்கம்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் மனமும் குணமும் செம்மையாகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். விலகும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.

குழந்தைகள் ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்கினால், கல்வியில் ஞானமும் புத்தியில் தெளிவும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close