இந்தக் காலத்து ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

Sridevi Vijayakumar Viral Photos ‘மாடிவி’யில் ‘காமெடி ஸ்டார்ஸ்’ எனும் நிகழ்ச்சியில் நடுவராக தன் திரைப்பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

Sridevi Vijayakumar Viral Latest Photoshoot Lehenga Choli Fashion Tamil News
Sridevi Vijayakumar Viral Latest Photoshoot

Sridevi Latest Viral Photoshoot Tamil News : விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகளான ஸ்ரீதேவி விஜயகுமாரின் சமீபத்திய போட்டோஷூட் பல ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதிலும் அவருடைய மகளுடன் இணைந்து எடுத்திருக்கும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். ‘வருடங்கள் அதிகரிக்க ஸ்ரீதேவியின் வயது குறைகிறதே!’ என்று கமென்ட் செய்யாத ஆள்கள் குறைவு எனலாம்.

குழந்தை நட்சத்திரமாய் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீதேவி, காதல் வைரஸ் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரைத் திருமணம் செய்தவர் திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது தெலுங்கு சேனலான ‘மாடிவி’யில் ‘காமெடி ஸ்டார்ஸ்’ எனும் நிகழ்ச்சியில் நடுவராக தன் திரைப்பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

பெரிய திரையிலிருந்து ஸ்ரீதேவி விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருந்தார். தன் கணவர், குழந்தை மற்றும் தன் குடும்பத்தினரோடு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வந்தார். அந்த வரிசையில் பேஸ்டல் பிங்க் மற்றும் மஞ்சள் நிற பாவாடை தாவணியில் ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே தோரணையில் இருக்கிறாரே என்கிற ஃபீட்பேக் கொடுக்காத ஆள்களே இல்லை.

மேலும், தன் ஐந்து வயது மகளோடு ஒரேபோன்ற இக்கட் உடையணிந்து இருந்தவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. ஸ்காலப் பார்டர் தாவணி அணிந்து மீண்டும் தன் வயதைப் பன்மடங்கு குறைத்திருக்கிறார் ஸ்ரீதேவி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sridevi vijayakumar viral latest photoshoot lehenga choli fashion tamil news

Next Story
சிம்பிளா வைக்கலாம் இஞ்சி ரசம்: செம டேஸ்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express