மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வியின் நடிப்பு குறித்து பாலிவுட்டில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
16 வயதினிலே படத்தில் பாவடை தாவனியில் தோன்றிய அழகு மயிலை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்து விட மாட்டார்கள். அவரின் இறப்பு இன்று வரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஸ்ரீதேவியின் நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.
அவரின் இறப்புக்கு பிறகு அதிகம் பேசப்படுபவர் அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போதே அவரின் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த பல திட்டங்களை வகுத்து இருந்தார். அவரின் அறிமுகம் படம் கூட எப்படி அமைய வேண்டும் என்று ஸ்ரீதேவி தான் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் தடாக் என்ற இந்தி படத்தில் ஜான்வி கபூர் அறிமுகம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது.
ஜான்வி கபூர் நடிப்பில் தடாக் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை பாலிவுட்டில் வெளியாகியது. இந்த திரப்படம் வசூல் ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றாலும், விமர்சனம் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக படத்தில் ஜான்வியின் நடிப்பு ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-4-1024x538.jpeg)
அதோடு ஜான்வி ஸ்ரீதேவி போல் திரையில் நடிக்கவில்லை என்றும் விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீதேவி கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியிருப்பது, “படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது ஜான்விக்கு முதல் படம் என்பதை மறந்து ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என்கிறார்கள். தன்னை தன் தாயுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று ஜான்வி கபூர் கேட்டுக் கொண்டும் பலனில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-67.jpg)
இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார் என்றார்.இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீtதேவிக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார்” என்று கூறியுள்ளார்.