Advertisment

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: மாந்துளிர் நிற பட்டில் நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5ம் நாளையொட்டி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மாந்துளிர் நிற பட்டில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

author-image
WebDesk
New Update
ஸ்ரீ ரங்கம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் நடைபெற்றது. உற்சவ

Advertisment

த்தின் 5ம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள்,  அரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை பிரபந்திற்காக, நம்பெருமாள் - மாந்துளிர் நிற பட்டு உடுத்தி காட்சியளித்தார்.

மேலும் நம்பெருமாள் சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய்;  நெற்றி சரம்,  சூர்ய- சூர்ய வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம்- தொங்கல் பதக்கம்;ரத்தின கடி அஸ்தம் (இடது திருக்கை), திரு மார்பில் ஆபரணங்களுகே ஏற்றம் தரும் -ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம் , காசு மாலை; அரைச் சலங்கை;
பின்புறம் - புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; காசு மாலையும் தழைந்து வரும் படி சாற்றி, கையில் தாயத்து சரங்கள், தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து  மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.

இன்று திருமாலை வழிபடும் வைணவ பக்தர்களுக்கு உகந்த நாளான சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் அ.தி.மு.க பிரமுகர்கள் ரங்கநாதரை வழிபட்டனர்.

Advertisment
Advertisement

ஸ்ரீரங்கம் காவல்துறையினர்  பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Srirangam Ranganathaswamy Temple srirangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment