தேங்காய் எண்ணெய், சின்ன வெங்காயம்.. ஸ்ரிதிகா பியூட்டி சீக்ரெட்ஸ்

என் அம்மா கடலை மாவு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு எல்லாம் காயவச்சு அரைச்சு வச்சிருவாங்க. அதுதான் குளிக்கும்போது எப்போவும் யூஸ் பண்ணுவேன்- ஸ்ரிதிகா.

என் அம்மா கடலை மாவு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு எல்லாம் காயவச்சு அரைச்சு வச்சிருவாங்க. அதுதான் குளிக்கும்போது எப்போவும் யூஸ் பண்ணுவேன்- ஸ்ரிதிகா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
srithika saneesh beauty tips

srithika saneesh beauty tips

சன் டி.வி.யில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரிதிகா. தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, வைதேகி, உறவுகள் சங்கமம் என பல சீரியல்களில் நடித்தார்.

Advertisment

இப்போது மகராசி சீரியலில் நடித்து வருகிறார்.

ஸ்ரிதிகா சின்னத்திரைக்கு வந்து 10 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும், இன்றும் அதே இளமையுடனும், பொலிவுடனும் இருக்கிறார். சொல்லப்போனால், நாளுக்குநாள் அவரது அழகு இன்னும் மெருகேறிக் கொண்டே போகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், தன் இளமைக்கான ரகசியம் குறித்து ஸ்ரித்திகா ஒருமுறை செளத் ஸ்கோப் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.

அப்போது ஸ்ரிதிகா பேசுகையில்; நான் சின்ன வயசுல இருந்து சோப்பு யூஸ் பண்ணதே கிடையாது. என் அம்மா கடலை மாவு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு எல்லாம் காயவச்சு அரைச்சு வச்சிருவாங்க. அதுதான் குளிக்கும்போது எப்போவும் யூஸ் பண்ணுவேன்.

அதிகமா மேக் அப் போடுறது எனக்கு பிடிக்காது. நான் லிப் பாம், காஜல் மட்டும் தான் போடுவேன்.  ஷூட்டிங் போதுகூட லைட் மேக்கப் தான் போடுவேன். அதேமாதிரி, மேக் அப் ரிமூவ் பண்றதுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் தான் யூஸ் பண்ணுவேன். வெயில இருந்து டானிங் ஆச்சுனா, தயிர்ல, எலுமிச்சை கலந்து தேய்ச்சா போதும். சரி ஆயிடும்.

எனக்கு ஆரம்பத்துல நிறைய முடி இருந்தது. ஆனா, இப்போ ரொம்ப கம்மி ஆயிடுச்சு. அதனால தேங்காய் எண்ணெய்ல, சின்ன வெங்காயம் கலந்து யூஸ் பண்ணேன். முடி கொட்டுறது நல்ல கம்மி ஆயிடுச்சு. டிராவல் பண்ணும் போது எப்போதுமே என்னோட பேக்ல லிப் பாம், கிரீன் டீ, ஃபிளாஸ்க், காஜல் இருக்கும். இதுதான் என்னுடைய அழகுக்கான சீக்ரெட் என்கிறார் ஸ்ரிதிகா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: