Advertisment

நெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு

இந்த தீவிற்கு சென்று வர விமான வசதி கிடையாது. தனியாக கப்பல் வசதியும் கிடையாது. 4 மாதங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வரும் சரக்கு கப்பல் மட்டுமே மக்கள் அங்கு செல்ல ஒரே வழி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
St.Helen islandஹெலன் தீவு

St.Helen island

தீவு, அந்தமான், லட்சத்தீவுகள், Mauritius என்று பல அழகிய அற்புது தீவுகளை பற்றி கேட்டிருப்போம், நம்மில் பலர் அதை கண்டும் இருப்போம். இருப்பினும் உலகில் மனித நடமாட்டம் மிகவும் குறைந்த காணப்படும் தீவு கூட்டங்களும், தனி தீவுகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. இன்று நாம் காணவிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு தீவை பற்றியே.

Advertisment

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உலகில் வேறெங்கும் இல்லாத அளவில் பூமி பந்தின் தனிமை படுத்தப்பட்ட தீவாக கருத்தப்படும் அந்த தீவு உள்ளது, அது தான் St.Helen என்று அழைக்கப்படும் அழகிய அமனுஷியா தீவு. நிலவியல் அடிப்படையில் இது ஒரு எரிமலை (Active Volcano எனப்படும் உயிர் உள்ள எரிமலை) சூழ்ந்த வெப்பமண்டல தீவு (Volcanic Tropical Island). 1502ம் ஆண்டு கடல் வழி வாணிபம் செய்யும் போர்த்துகீசியர் ஒருவரால் கண்டறியப்பட்டது, வரலாற்று கூற்றுகளில் பல நூறு ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து ஐரோப்பா சென்று வர இந்த தீவின் வழியே பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது.

ஆனால் பல இடங்களில், பல குறிப்புகளில் இந்த தீவை கண்டறிந்தது பிரான்சிஸ் எனப்படும் ஸ்பெயின் நாட்டவர் என்றும் ரோமானிய பேரரசி Helen of Constantinople அவர்களின் நினைவாக இந்த தீவுக்கு Helen என்று பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றது. அழகிய சோலைகள், கனி தரும் மரங்கள் என்று பசுமையாக விளங்கியதாலும், கப்பல் போக்குவரத்து மாற்று கடல் பிரயாணிகள் ஓய்வெடுக்க சிறந்த இடமாக இருப்பதாலும் இது துறைமுகமாக மாற்றப்பட்டது. காலங்கள் கடந்தன... பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கை ஓங்கியது, அந்த தீவு பிரிட்டிஷ் நாட்டு தீவாக மாறியது. உலகில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் பேரரசு இந்த தீவு உலகில் பிற இடங்களில் இருந்து தனிமைப்பட்டு கிடப்பதை அறிந்தது. 2000 கி.மி சுற்றளவில் வெறும் கடல் நீர் மட்டுமே உள்ளது என்று உணர்ந்து அந்த இடத்தை அடிமைகளை சிறைபிடிக்கும் இடமாக மாற்றியது.

31 டிசம்பர் 1600ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்த East India Companyயின் தலைமை இடமாகவும் 1700களில் இந்த இடம் திகழ்ந்தது. 1800ம் ஆண்டு, பல நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட தொடங்கிய காலத்தில், ஆப்பிரிக்கா படையுடன் இணைத்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பிரெஞ்சு நாட்டு அரசர் தான் Napoleone di Bnonaparte. 1815ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் இந்த தீவில் அடைக்கப்பட்டார், பின்னர் 1821ம் ஆண்டு இந்த தீவில் தான் உயிர் துறந்தார். ஆனால் ஒரு கைதி போல் அல்லாமல் மிக உயரிய விதத்திலே அவர் பாதுகாக்கப்பட்டார். அவருக்கென்று ஒரு வீடு, பார்வையாளர் அறை, எழுதும் அறை, அறை நிறைய புத்தகங்கள் என்று வாழ்ந்தார். தன் எழுத்துக்களில் கூட ஹெலன் தீவின் காபி பற்றிய அதன் இயற்கை வளங்கள் பற்றியும் அவர் நிரம்ப எழுதியுள்ளார். சரி இந்த தீவு அமானுஷ்யமான தென்பட என்ன காரணம், வாருங்கள் காண்போம்.

தற்போது இந்த தீவு பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெறும் 16 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட இந்த தீவிற்கு சென்று வர விமான வசதி கிடையாது. தனியாக கப்பல் வசதியும் கிடையாது. 4 மாதங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வரும் சரக்கு கப்பல் மட்டுமே மக்கள் அங்கு செல்ல ஒரே வழி. 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வெறும் 4534 பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். அதிலும் அங்கு வசிக்கும் 60 சதவிகித மக்கள் வயது முதிர்ந்தவர்களே. Cunene River என்ற இடமே இதன் அருகில் உள்ள ஒரே நிலம், அதற்கும் கடலில் 2000 கி.மீ கடக்க வேண்டியிருக்கும். மேலும் இறுதியாக 1980ம் ஆண்டு வெடித்த Mount Helen இங்கு தன உள்ளது. இன்றும் சிலர் வீடு அருகில் எரிமலை குழம்பு படிவங்கள் இருப்பதாய் நம்மால் காணமுடிகிறது.

இந்த தீவு வாழ் மக்கள் இந்த இயற்க்கை சூழல், அமைதியான வாழ்கை முறை, அதீத தொழிநுட்பங்கள் எதுவும் இன்றி இங்கு வாழ்வது தங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் ஆகவே தாங்கள் எங்கும் செல்வதில்லை என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கென்ற தனி மருத்துவமனை, பல்பொருள் அங்காடி அழகிய பூங்கா என்று பொது வாழ்வில் இருந்து விலகி இன்பமாக வாழ்கின்றனர். ஆச்சர்யத்தின் உச்சமாக தற்போது பிற நட்டு மக்கள் இங்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். ஆம் நெப்போலியன் அவர்களின் இறப்புக்கு பின் அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அவர் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த பழங்கால பொருட்கள் அனைத்தும் இந்த தீவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதை காண்பதற்கும் மேலும் இந்த தனிமை சூழலை அனுபவிப்பதற்கும் மக்கள் இங்கு வர தொடங்கியுள்ளனர். ஆயினும் உலகின் மிகவும் தனிமை படுத்தப்பட்ட உயிருள்ள எரிமலை உள்ள இந்த தீவுக்கு சென்று வருவது ஒரு ஆச்சர்யம் கலந்த இன்பமே.

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment