Advertisment

காலையில பிரஷ் பண்ணும் போது நீங்க ஏன் ஒத்த கால்ல நிக்கணும்? பிஸிகல் தெரபிஸ்ட் அட்வைஸ்

கிட்டத்தட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இந்தப் பயிற்சியை அவர் பரிந்துரைக்கிறார் என்று ஒப்புக்கொண்டதால், இதுகுறித்து நாங்கள் மேலும் அறிய விரும்பினோம்.

author-image
WebDesk
New Update
Standing on one leg benefits

Physical therapist advises standing on one leg and brushing your teeth. We find out why

பிஸிகல் தெரபிஸ்ட் டாக்டர் டெஸ்ஸா ஷிஃப்லெட், காலை வேளையில் பல் துலக்கும்போது ஒற்றைக் காலில் நிற்க பரிந்துரைக்கிறார்.

Advertisment

கிட்டத்தட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இந்தப் பயிற்சியை அவர் பரிந்துரைக்கிறார் என்று ஒப்புக்கொண்டதால், இதுகுறித்து நாங்கள் மேலும் அறிய விரும்பினோம்.

ஒற்றை-கால் சமநிலை (Single-leg balance) மிகவும் முக்கியமானது.

ஏன் ஒரு காலில் நிற்க வேண்டும்?

*கணுக்கால், முழங்கால், இடுப்பு மற்றும் மைய வலிமை

*சிறிய உறுதிப்படுத்தும் தசைகளின் தாங்கும் ஆற்றல்

* ப்ரோபிரியோசெப்டிவ் ஒருங்கிணைப்பு

*அறிவாற்றல் உள்ளீடு

நீங்கள் பல் துலக்கும்போது அதைச் செய்வது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் மேலே உள்ள அனைத்தையும் இணைத்துக்கொள்வதற்கான எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாகும், என்றார் டாக்டர் ஷிஃப்லெட்

மற்ற நிபுணர்கள் சொல்வது என்ன?

இதை ஒப்புக்கொண்ட சோனியா பக்ஷி (nutritionist and founder DtF), 18 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 43 வினாடிகளும், நீங்கள் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் 40 வினாடிகளும் ஒற்றைக் காலில் நிற்க வேண்டும் என்றார்.

நீங்கள் அதை நாளின் எந்த நேரத்திலும் செய்யலாம், பல் துலக்கும்போது செய்ய அவசியமில்லை. ஆனால் பிரஷ் பன்ணுவது என்பது நீங்கள் சில நிமிடங்கள் நிற்க வேண்டிய வழக்கமான செயல்களில் ஒன்றாக இருப்பதால், உங்கள் பாதுகாப்பையும் இடத்தையும் மனதில் வைத்து இந்தப் பயிற்சியை இணைக்கலாம், என்று பக்ஷி கூறினார்.

பல் துலக்கும் போது இந்தப் பயிற்சியை மேற்கொள்வது உங்கள் அன்றாட வழக்கத்தில் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, கூடுதல் நேரம் தேவைப்படாமல் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது என்கிறார், டாக்டர் ஹரிசரண் ஜி (senior consultant physician, HoD Internal Medicine, Gleneagles Hospitals, Lakdi Ka Pul, Hyderabad)

இது ஒரு அறிவாற்றல் சவாலையும் சேர்க்கிறது, ஏனெனில் மற்றொரு பணியைச் செய்யும்போது சமநிலையை பராமரிப்பது மல்டி டாஸ்கிங் திறன்களையும் மனநலத்தையும் மேம்படுத்துகிறது, என்று டாக்டர் ஹரிசரண் கூறினார்.

இந்தப் பயிற்சியானது, அடிக்கடி புறக்கணிக்கப்படும் நரம்புத்தசையின் மீட்பு மற்றும் தினசரி செயல்பாடுகளை குறிவைக்கிறது என்று டாக்டர் அஷ்வனி மைசந்த் கூறினார். (director, Dept of orthopaedics, CK Birla Hospital, Delhi)

எந்தவொரு முதுகு அல்லது கீழ் முனை காயத்திற்குப் பிறகு, ப்ரோபிரியோசெப்சன் அல்லது உங்கள் உடல் அதன் நிலையை உணரும் திறன் கணிசமாகக் குறைக்கப்படும்.

Yoga for weight loss

வலிமை, இயக்கம் மற்றும் வலி மேலாண்மை ஆகியவை மீட்புக்கான முக்கிய கூறுகளாக இருந்தாலும், நரம்புத்தசை ஒருங்கிணைப்பு சமமாக முக்கியமானது. ஒரு காலில் நிற்பது கணுக்கால், முழங்கால், இடுப்பு மற்றும் மைய தசைகளை ஈடுபடுத்துகிறது, சமநிலைக்கு இன்றியமையாத சிறிய உறுதிப்படுத்தும் தசைகளில் வலிமையை உருவாக்குகிறது, என்று டாக்டர் மைச்சந்த் கூறினார்.

மக்கள் ஒற்றைக் காலில் நிற்கும் திறன் ஆரோக்கியத்தின் குறிகாட்டியாகும், இதை சிறப்பாகச் செய்வது உடற்தகுதியைக் கூட்டி, ஆயுட்காலத்தை மேம்படுத்தும்.

ஒற்றைக் காலில் நிற்கும் திறன் அதிகரித்த உடல் செயல்பாடு மற்றும் கீழே விழும் ஆபத்து குறைவதோடு தொடர்புடையது. உலகளவில் வருடத்திற்கு சுமார் 37.3 மில்லியன் கீழே விழுதல் சம்பவம் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையானவை, என்று பக்ஷி கூறினார்.

விழித்திருக்கும் போது உட்கார்ந்து அல்லது சாய்ந்து கொள்வது குறைந்த தசை வலிமை, கீழே விழும் அபாயம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய், அதிக இடுப்பு சுற்றளவு மற்றும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம், என்று பக்ஷி கூறினார்.

20 வினாடிகள் அல்லது அதற்கு மேல் ஒரு காலில் பேலன்ஸ் செய்ய முடியாதது, ஆரோக்கியமான மக்களில் "மூளையில் சிறிய ரத்த நாளங்கள் சேதமடையும் மற்றும் அறிவாற்றல் திறன்களைக் குறைக்கும் ஆபத்து" ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பக்ஷி எச்சரித்தார்.

கர்ப்பம், மாதவிடாய், நோய் மற்றும் பணி ஓய்வு ஆகியவை நமது வலிமை, சமநிலை மற்றும் நிமிர்ந்து நிற்கும் திறனை மாற்றும், பெரும்பாலும் இவை வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான நமது திறனையும் உந்துதலையும் பாதிக்கிறது, என்று பக்ஷி கூறினார்.

முடிவில், அவர் வயதாகும் போது அதிக உடல் செயல்பாடுகளை வலியுறுத்தினார். "நாம் எவ்வளவு அதிகமாக உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் நல்ல சமநிலையைப் பெறுவோம்.

நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில், ஒரு நபர் ஒரு காலில் சமநிலைப்படுத்தும் ஒரு தருணம் எப்போதும் இருக்கும்.

ஒற்றை-கால் சமநிலையைப் பயிற்சி செய்வது இந்த செயல்பாடுகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் செய்யும் திறனை மேம்படுத்துகிறது., இது மன மற்றும் உடல் திறன்களைக் கூர்மைப்படுத்த ஒரு சிறந்த வழியாகும், என்று டாக்டர் மைச்சந்த் கூறினார்.

Read in English: Physical therapist advises standing on one leg and brushing your teeth. We find out why

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment