ஊதா ஊதா ஊதாப்பூ.. என் வீட்டுல நானும் செஞ்ச சொதப்பு – ‘ஜோடி’ சுனிதாவின் லாக்டவுன் அட்ராசிட்டிஸ்!

Star Vijay Sunitha Youtube channel review trending அவருடைய எக்ஸ்ப்ரஷனுக்கு ஏற்றபடி இணைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர்கள் சரவெடி.

Star Vijay Sunitha Jodi no 1 fame Youtube channel review trending Tamil News
Star Vijay Sunitha Jodi no 1 fame Youtube channel review trending Tamil News

Star Vijay Sunitha Jodi no 1 fame Youtube channel review trending Tamil News : வட இந்தியாவிலிருந்து சென்னை வந்து, தமிழ்நாட்டின் பெண் நடன சூறாவளி என்று பெயர் வாங்கிய சுனிதா, இப்போது வீட்டை சுத்தம் செய்வதில் கில்லாடி என்கிற பெயரையும் வாங்கியிருக்கிறார். சுனிதா எக்ஸ்பிரஸ் என்று தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் பல காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் பதிவேற்றிய காணொளி ட்ரெண்டிங் நம்பர்2. அப்படி என்ன இருக்கிறது அந்த காணொளியில்?

“ஊதா ஊதா ஊதாப்பூ.. என் வீட்டுல நானும் செஞ்ச சொதப்பு..” என்று பாடியபடியே சுனிதா என்ட்ரியாகும் இந்த காணொளியின் ஆரம்பமே வேற லெவல் காமெடி டச். லாக்டவுன் என்பதனால், வீட்டு வேலைகள் செய்ய ஆள் வரவில்லையாம். அதனால், எல்லா வேலைகளையும் இவரே செய்வதென்று முடிவெடுத்து, நமக்கு கன்டென்ட் ரெடி செய்துவிட்டனர்.

கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு, “சொர்க்கம் எனக்கு உனக்கு… சுத்தம் எதுக்கு நமக்கு” என்று நம்மவர் பாடலை எவ்வளவு கொலை செய்ய முடியுமோ, அவ்வளவு கொன்றுவிட்டார். எதை முதலில் சுத்தம் செய்வது என்பதில் தொடங்கி எதனால் சுத்தம் செய்வது வரை என்று குழப்பமடைந்து நிற்கும் சுனிதாவின் ரியாக்ஷன் செம்ம ஃபன். அதைவிட அவருடைய எக்ஸ்ப்ரஷனுக்கு ஏற்றபடி இணைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர்கள் சரவெடி.

சோபாவை சுத்தம் செய்துவிட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் வீடுகளை எட்டிப்பார்ப்பது, வீட்டைக் கூட்டியபிறகு ஒட்டடை அடிப்பது, வாய்க்கு வந்தபடி தப்பு தப்பாகத் தமிழில் பேசுவது என வீடியோ முழுவதும் நம்மை என்டெர்டெயின் செய்துவிட்டார். முக்கியமாகப் பாத்திரம் கழுவும்போது தன் அம்மா தனக்காக பிரத்தியேகமாகச் செய்யச் சொல்லி வாங்கிய தட்டு, டம்ப்ளர் என்று காட்டி, அதனை மட்டும் தேய்த்து வைத்துவிட்டு, கை காலெல்லாம் வலிக்குது என்று சொன்னதெல்லாம்.. முடியல!

‘சும்மா கிழி..’ பாடலை ஒளிபரப்பி, ஆடிக்கொண்டே வீட்டைத் துடைத்ததெல்லாம் சுனிதாவின் தனி வழி ஸ்டைல். இறுதியாக, “இப்படியெல்லாம் நான் வேலை செய்ததே இல்லை. சாப்பிடுவேன், டிவி பார்ப்பேன், தூங்குவேன். கொஞ்சம் பன்னதுக்கே ரொம்ப டயர்டா இருக்கு. பண்ணுன வேலையும் ஒழுங்கா பண்ணலை. அரைகுறையாகத்தான் பண்ணியிருக்கேன். நானும் எல்லோரைபோல ஹோம் டூர், பாத்ரூம் டூர்.. இல்ல இல்ல பாத்ரூம் டூரெல்லாம் போடமாட்டேன். ஆனா, ஹோம் டூர் போடுறேன். என்னவோ உளர்றேன். பை” என்றபடி நிறைவு செய்திருந்தார்.

இந்த குறிப்பிட்ட வீடியோ, 7 லட்சம் வியூஸ்களை பெரும் நிலையில் இருக்கிறது. ஏற்கெனவே, 3 லட்ச சப்ஸ்ரைப்பர்ஸ்களை வைத்திருக்கும் சுனிதா, இப்போது இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Star vijay sunitha jodi no 1 fame youtube channel review trending tamil news

Next Story
“ஒரு ரூபாய் கூட இல்லாமல் சென்னையில் வாழ்ந்திருக்கேன்” – செய்தி வாசிப்பாளர் கண்மணி ஃபிளாஷ்பேக்!News Reader Kanmani Sekar Lifestyle Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com