எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க?... : நெட்பேங்கிங் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்
SBI Netbanking : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் குறித்த விஷயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்
SBI Netbanking : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் குறித்த விஷயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்
state bank of india,SBI Online,sbi netbanking,sbi bank,onlinesbi,
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் குறித்த விஷயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்
Advertisment
SBI Netbanking ல் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி எவ்வாறு பதிவு செய்வது?
எஸ்பிஐ யில் இருந்து Pre-Printed Kit ஐ பெறாத பயனர்கள் SBI Netbanking ல் தங்களை பதிவு செய்ய இந்த வசதியை பயன்படுத்தலாம். onlinesbi.com என்ற இணையதள முகவரியில் சென்று, Personal Banking என்ற தேர்வில் உள்ள New User Registration என்பதை சொடுக்கி அடுத்து OK சொடுக்கி மேலும் தொடரவும். வங்கி கணக்கு எண், CIF எண், வங்கி கிளை குறியீடு, பதிவு செய்யப்பட்ட கைபேசி எண், என்ன வசதி தேவை, பாதுகாப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து சமர்பிக்கவும். பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) உள்ளீடு செய்யவும். 'I have my ATM Card' என்ற தேர்வை தேர்ந்தெடுத்து உங்கள் ஏடிஎம் அட்டை விவரங்களான அட்டை எண், செல்லுபடியாகும் தேதி, ஏடிஎம் PIN, பாதுகாப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து தொடரவும். தற்காலிகமான பயனர் பெயர் உருவாக்கப்பட்டு உங்களிடம் புதிய உள்நுழையும் கடவுச்சொல்லை உருவாக்க சொல்லும். successful registration என்ற செய்தி வரும், மேலும் தற்காலிக பயனர் பெயர் உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்காலிக பயனர் பெயர் மூலம் உள்நுழைந்து ஒரு புது பயனர் பெயரை மேலும் பயன்பாட்டுக்காக மீண்டும் அமைக்க வேண்டும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
OnlineSBI சேவையை எவ்வாறு இயக்குவது?
எஸ்பிஐ யில் வங்கி கணக்கு உள்ள எவரேனும் SBI netbanking சேவைக்கான கோரிக்கையை எழுப்பலாம். முதல் முறை உள்நுழைய பயன்படும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல் அடங்கியுள்ள ஒரு Pre Printed Kit (PPK) ஐ வங்கி உங்களுக்கு தரும். இதை பயன்படுத்தி onlinesbi.com என்ற இணையதள் முகவரியில் உள்நுழையவும். அந்த பக்கத்தில் உள்ள படிப்படியாக உள்ள வழிகாட்டியை பயன்படுத்தி பதிவு செய்யும் நடைமுறையை பூர்த்தி செய்யவும்.
OnlineSBI கடவுச்சொல்லை எவ்வாறு reset செய்ய வேண்டும்?
எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று forget password தேர்வை சொடுக்கவும். பயனர் பெயர், வங்கி கணக்கு எண், வங்கியில் பதிவு செய்துள்ள கைபேசி எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து, சமர்ப்பி பட்டணை சொடுக்கி ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை பெறவும். ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்கள் கடவுச்சொல்லை reset செய்யவும்.
cheque payment ஐ எவ்வாறு OnlineSBI மூலம் நிறுத்துவது?
பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி OnlineSBI ல் உள்நுழையவும். 'stop cheque payment' என்ற தேர்வை சொடுக்கி Requests & Enquiries tab என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் நிறுத்த நினைத்த cheque எண்ணை தேர்ந்தெடுத்து அதில் கொடுத்துள்ளது போல தொடரவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil