சூதானமாக இல்லைன்னா பேங்க் பேலன்ஸ் அம்போ..- வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் SBI

வாடிக்கையாளர்கள் இந்த கடன் தவணை தடை சலுகையை பெற, சம்பந்தப்பட்ட படிவத்தை நிரப்பி தர வேண்டும் என்றும், வேறு எந்த வழியிலும் இந்த சலுகையை பெற முடியாது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: April 10, 2020, 1:28:05 PM

கொரோனா வைரஸ் விவகாரத்தை பயன்படுத்தி சில திருடர்கள் வங்கி விபரங்களை OTP மூலம் திருட திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பீதி உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிக்கலால், மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த 3 மாத அவகாசத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஸ்டேட் வங்கி உள்பட பெரும்பாலான வங்கிகள் இந்த ஆறுதலான நடவடிக்கையை செயல்படுத்தி வருகின்றன. 1-3-2020 முதல் 31-5-2020 வரையிலான தவணைகளை 1-6-2020 முதல் செலுத்தலாம் என அறிவித்துள்ளது. இதனை தங்களது வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்துள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையை, திருடர்கள், குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுவதாகவும், கடன் தங்கள் மொபைல்போனிற்கு வரும் OTP எண்ணை தெரிவித்தால் மட்டும, தவணை தடை சலுகையை பெறலாம் என்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். OTP எண்ணை பெற்ற அவர்கள், வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை லவட்டி விடுகின்றனர்.

இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஸ்டேட் வங்கி சார்பில் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இத்தகைய சைபர்கிரைம் திருடர்களிடம் நாம் விழிப்புடன் இருப்போம். வங்கி யாரிடமும் OTP எண்ணை கேட்பதில்லை. மற்றவர்களுக்கு OTP எண்ணை வழங்கி தங்களது பணத்தை இழந்துவிடாதீர்கள் என்று எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு, BE ALERT & BE AWARE என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த கடன் தவணை தடை சலுகையை பெற, சம்பந்தப்பட்ட படிவத்தை நிரப்பி தர வேண்டும் என்றும், வேறு எந்த வழியிலும் இந்த சலுகையை பெற முடியாது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Statebank of india tamil news state bank of india emi moratorium sbi warns customers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X