scorecardresearch

தினமும் இரவு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? அப்ப கண்டிப்பா இதைப் படிங்க

தினமும் இரவு தாமதமாக தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

தினமும் இரவு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? அப்ப கண்டிப்பா இதைப் படிங்க

நம்முடைய அன்றாட வாழ்க்கை இயந்திர தனமாக மாறிவிட்டது. பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. காலையில் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்புவோம். பின்பு, சாப்பிட்டு வேலைகளை முடித்தப்பின் போன் பயன்படுத்துவோம், டிவி பார்ப்போம் என ஏதாவது வேலை செய்வோம். சிலர் இரவு வெகு நேரம் விழித்திருந்து சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். முறையான தூக்கத்தை கடைபிடிக்காமல் இருப்பர்.

அந்தவகையில் தொடர்ந்து இரவு தாமதமாக தூங்குவதை பழக்கமாக கொண்டிருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர், ஆய்வும் அதை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், இரவு தொடர்ந்து தாமதமாக தூங்குவது
டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு கூறகிறது. இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவர்களுடம் ஒப்பிடுகையில் இது குறிப்பிடப்படுகிறது.

அதிகாலையில் எழுபவர்கள் கொழுப்பை ஆற்றலாக பெறுகின்றனர். நீண்ட நேரம் சுறுசுறுப்பு மற்றம் ஆற்றலைக் கொண்டுள்ளனர். அதாவது இரவுநேரங்களில் கொழுப்பு மிகவும் எளிதாக உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரவு தாமதாக தூங்குபவர்களுக்கு இன்சுலின் உற்பத்தி குறைவாக உள்ளது. இது நீரிழிவு மற்றும் இதய நோய் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர்.

மேலும் இந்த ஆராய்ச்சி மருத்துவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர். உணவு, எடை குறைப்பு, தூக்க முறை பற்றி நிறைய ஆய்வுகள் உள்ளன, ஆனால் இதய நோய்களுக்கு பல காரணிகள் உள்ளன.

இரவில் வெகுநேரம் விழித்திருப்பவர்கள் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்கின்றனர். அதேநேரம் அதிகாலையில் எழுபவர்கள் நடைபயிற்சி, யோகா செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. உணவு, உடற்பயிற்சி, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், ஜீன் மற்றும் பிற காரணங்களால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று மேக்ஸ் ஹெல்த்கேரின் இருதய அறிவியல் முதன்மை இயக்குநர், எய்ம்ஸ் மருத்துவர் வி.கே.பால் கூறுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் நடுத்தர வயது கொண்ட 51 நபர்களை 2 குழுக்களாகப் பிரித்து ஆய்வு செய்தனர். தூக்கம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இரவில் தாமதாக தூங்குபவர்கள் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. சீக்கிரம் தூங்கி எழுபவர்களை ஒப்பிடுகையில் என்று பேராசிரியர் மாலின் கூறினார்.

சீக்கிரம் தூங்குபவர்கள், தாமதமாக தூங்குபவர்கள் இடையே கொழுப்பு வளர்சிதை மாற்றம் ஏற்படுகிறது. நமது உடலின் சர்க்காடியன் ரிதம் (விழிப்பு / தூக்க சுழற்சி) நம் உடல்கள் இன்சுலினை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இன்சுலின் ஹார்மோனுக்கு பதிலளிக்கும் ஒரு உணர்திறன் அல்லது பலவீனமான திறன் நமது ஆரோக்கியத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்று மாலின் கூறினார்.

இந்த ஆய்வு நமது உடலின் சர்க்காடியன் செயல்முறை எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது. முன்னதாக, 2018ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், தாமதமாக சாப்பிடுவதும் டைப் -2 நீரிழிவை ஏற்படுத்தக் கூடும் என கண்டறியப்பட்டது.

ஏனெனில் சர்க்காடியன் ரிதம் உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. குளுக்கோஸ் அளவுகள் இயற்கையாகவே பகல் முழுவதும் வேலை செய்து இரவில் முற்றிலும் குறைந்த அளவில் இருக்க வேண்டும். ஆனால் தாமதாக தூங்குபவர்கள் உறங்குவதற்கு சற்று முன் சாப்பிடுவதால், அது குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. இது இயல்பான உயிரியல் செயல்முறையைப் பின்பற்றாததால் வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Staying up late you may be more prone to heart disease and diabetes says study