நாள்பட்ட கட்டுப்பாடற்ற நீரிழிவு நரம்பு சேதம், இருதய பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் விருப்பத்தையும் இழக்கச் செய்கிறது.
இதை சமாளிப்பது குறித்து பிரபல நீரிழிவு மருத்துவரான தீபிகா மிஸ்ரா பல டிப்ஸ்கள் வழங்கினார். அதன்படி, நீரிழிவு நோயால் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நரம்பு மண்டல மாற்றங்களால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது.
இதனால், பாலியல் ஆசை குறைகிறது, ஆற்றல் குறைகிறது, மனச்சோர்வு, பதற்றம், சோர்வு, எடை அதிகரிப்பு, அடிக்கடி சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடும், பெண்களுக்கு கருவுறாமையும் ஏற்படுகிறது” என்றார்.
மேலும், "நீரிழிவு பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு (லிபிடோ இழப்பு, டிஸ்பாரூனியா, தொற்றுகள்) எனப்படும் உளவியல் மற்றும் உடலியல் என பாலுணர்விற்கு தீங்கு விளைவிக்கும்” என்றார்.
தொடர்ந்து, இதைத் தவிர்க்க நாம் தினமும் மேற்கொள்ள 10 பண்புகள் குறித்து கூறினார்.
அவை,
1) நீரிழிவை குறைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இன்சுலின் எடுத்துக்கொள்வது.
2) அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு உட்கொள்ளல். அதாவது, பச்சை இலைகள் மற்றும் சாலட் காய்கறிகள், கேரட், பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி உள்ளிட்டவை ஆகும்.
3) தினந்தோறும் உடற்பயிற்சி
4) யோகா மற்றும் தியானம்
5) ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்த்தல்
6) தினமும் 8-10 மணி வரை தூக்கம்
7) புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதீத காபி உள்ளிட்டவற்றை கைவிடல்
8) மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் பயிற்சி. உதாரணமாக, மனம் விரும்பிய புத்தகம் படித்தல், இசை கேட்டல், எழுத்துப் பயிற்சி
09) பாலியல் பிரச்னைகளுக்கு மருத்துவரிடம் கூறி உரிய தீர்வு பெறுதல்
10) பாலியல் பிரச்னைகளுக்கு தங்கள் துணையிடம் மனம் விட்டு பேசலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/