/indian-express-tamil/media/media_files/2025/10/03/download-87-2025-10-03-13-40-12.jpg)
டாய்லெட்டில் ஏற்படும் கெட்ட வாடை என்பது வீட்டில் இருக்கும் ஒருவருக்கும் கடும் இடையூறாகும். இது வெறும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்கே அல்லாமல், வீட்டின் சுத்தம் மற்றும் ஆரோக்கிய நிலையை குறைக்கும் ஒரு முக்கிய காரணியாகவும் அமைகிறது. இந்த துர்நாற்றம் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக, கழிப்பறையை தினமும் சுத்தம் செய்யாதது, கழிவுநீர் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது, பைப் இணைப்புகளில் வழுகல் அல்லது கசிவுகள் இருப்பது, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமிக்கப்பட்டிருப்பது போன்றவை முக்கியமான காரணங்களாகும். மேலும், டாய்லெட்டில் போதுமான காற்றோட்டம் இல்லாவிட்டால், இந்த துர்நாற்றம் உள்ளே சிக்கிக்கொண்டு நீடிக்கக்கூடியதாகிவிடும்.
காற்றோட்டம் இல்லாத இடங்களில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இதனால் சுவர்கள் மற்றும் அடிப்பகுதியில் பூஞ்சை மற்றும் கிருமிகள் வளர வாய்ப்பு அதிகம். இது தவிர, கழிப்பறையில் பயன்படுத்தப்படும் துவைக்கும் துணிகள் அல்லது வாடர் கிளாஸ் போன்று நீரிலே நனைந்ததும், சரியாக உலராததும் வாசனையை மேலும் மோசமாக்கும்.
தினசரி பராமரிப்பு
இந்த துர்நாற்றத்தை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, முதலில் தினசரி டாய்லெட்டை சுத்தமாக பராமரிப்பது மிக அவசியம். குறிப்பாக, வாஷ்பேசின், ஃபிளஷ் ஸிஸ்டம், தரை மற்றும் சுவர்களில் சேரும் காசுகளை நீக்க வேண்டும். டாய்லெட்டுக்குள் கழிவுகள் தேங்கி நிற்காத வகையில் பைப் மற்றும் டிரெயின் இணைப்புகள் சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். அடிக்கடி வெணிகர் (vinegar), பேக்கிங் சோடா போன்ற இயற்கை சுத்திகரிப்பு பொருட்களை பயன்படுத்தி கழிப்பறையில் உள்ள கிருமிகளை அழிக்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை போட்டு, அதில் சிறிது வெணிகரை ஊற்றி, நுரை வரும் வரை காத்திருந்து கழிப்பறையில் ஊற்றி விட்டால், அது வாசனை காரணமாக இருக்கும் கிருமிகளை அழிக்கும். மேலும், ஹார்ட் கிளீனர்களைப் பயன்படுத்தினாலும், அதை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது, ஏனெனில் அதிகமாக பயன்படுத்தினால் பைப் தளபாடங்கள் பாதிக்கப்படலாம்.
ஒரு எளிய டிப்!
அனால் சில நேரங்களில் இது அனைத்தயும் பயன்படுத்தினால் டாய்லெட் சுத்தமாக இருக்கலாம், அனால் வாடை வராமல் இருக்க வேண்டுமென்றால் இந்த சிறந்த டிப்பை பயன்படுத்தவும்.
முதல் ஒரு வாட்டர் பாட்டில் எடுத்து அதன் மூடியில் ஓட்டை போட்டு வைக்க வேண்டும். இப்போது அந்த பாட்டிலில் கொஞ்சம் காமபோர்ட் லிக்விட் எடுத்து ஊற்றி அதனுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து அதை உங்கள் டாய்லெட்டில் அவ்வப்போது பயன்படுத்தி வந்தால் கெட்ட வாடை குறையும்.
மொத்தமாகக் கூறும்போது, டாய்லெட்டில் வரும் கெட்ட வாசனையை நிரந்தரமாக ஒழிக்க, சுத்தம், பராமரிப்பு மற்றும் காற்றோட்டம் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில், இது சுகாதாரத்தையும், குடும்பத்தின் நலத்தையும் பாதிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.