ஸ்ட்ராபெர்ரி பழத்தை ஆண்டு முழுவதும் ருசிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? செஃப் நேஹா தீபக் ஷா, இன்ஸ்டாகிராமில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை எப்படி சேமிப்பது என்று பகிர்ந்துள்ளார்.
நீங்கள் ஸ்ட்ராபெரி பிரியர் என்றால், அதன் வழக்கமான பருவத்திற்கு அப்பால் இந்த புளிப்பு சுவையை அனுபவிக்க விரும்பினால், இந்த எளிய ஹேக்கை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.
பழங்களைப் பொறுத்து, சில பழங்கள் உறைந்த நிலையில் அவற்றின் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கின்றன, சில புதியதாக உட்கொள்ளும் போது அவற்றைக் கொண்டிருக்கும். “நீங்கள் பழங்களை உடனடியாக உறைய வைத்தால், அதன் ஊட்டச்சத்து விவரம் ஒரு புதிய பழத்தில் இருப்பதைப் போலவே இருக்கும், ”என்று மருத்துவ உணவியல் நிபுணர் கரிமா கோயல் தெரிவித்தார்.
டாக்டர் பிரிஜ் வல்லப் ஷர்மா (consultant internal medicine, Narayana Multispeciality Hospital, Jaipur), உறைந்த பழங்களை கையில் வைத்திருப்பது வசதியான தேர்வாக இருக்கும் என்று கூறினார்.
முதலாவதாக, உறைந்த பழம் அதன் ஊட்டச்சத்து மதிப்பின் பெரும்பகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறது, ஏனெனில் இது பொதுவாக அதன் உச்ச பழுத்த நிலையில் உறைந்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் பூட்டப்படுகிறது.
இரண்டாவதாக, உறைந்த பழங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றன, கெட்டுப்போகும் மற்றும் உணவு வீணாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. இது வெர்சட்டைல். ஸ்மூத்திஸ், இனிப்புகள் அல்லது தயிர், ஓட்மீல் ஆகியவற்றில் டாப்பிங்ஸாக பயன்படுத்தப்படலாம், என்று டாக்டர் சர்மா கூறினார்.
சிறந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை கவனமாக பார்த்து வாங்கவும். இலைகளை அகற்றி, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து அழுக்குகளை அகற்ற அவற்றை நன்கு கழுவவும்.
கழுவிய பின், ஒரு டவலைப் பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரிகளை உலர வைக்கவும். அதிகப்படியான ஈரப்பதத்தை அகற்றுவதை உறுதிசெய்யவும்.
இப்போது ஸ்ட்ராபெர்ரிகளின், தண்டு பகுதியை வெட்டவும்.
ஸ்ட்ராபெர்ரிகளை ஒரு ட்ரேயில் வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். அவை பகுதியளவு உறைந்தவுடன், அவற்றை ஒரு வசதியான ஜிப்-லாக் பையில் மாற்றி, அவற்றை மீண்டும் ஃப்ரீசருக்குள் வைக்கவும்.
இந்த சிக்கலற்ற செயல்முறையை கடைபிடிப்பதன் மூலம், ஸ்ட்ராபெர்ரிகளின் புத்துணர்ச்சியையும் சுவையையும் ஒரு வருடம் வரை வெற்றிகரமாக பாதுகாக்க முடியும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பெர்ரிகளை அனுபவிக்கும் முன், அவற்றை சில நிமிடங்கள் அறை வெப்பநிலையில் வைத்திருங்கள்.
மாற்று வழி
உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வேண்டும் என்றால், புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்கு கழுவி மிக்சியில் சேர்த்து ப்யூரியாக அரைக்கவும். இந்த ப்யூரியை ஐஸ் ட்ரேயில் ஊற்றி க்யூப்ஸை உறைய வைக்கவும். உறைந்தவுடன், ஸ்ட்ராபெரி க்யூப்ஸை வசதியான சேமிப்பிற்காக ஜிப்-லாக் பையில் மாற்றவும்.
செஃப் நேஹாவின் புத்திசாலித்தனமான ஸ்ட்ராபெர்ரி சேமிப்பு ஹேக்கிற்கு நன்றி, சீசன் எதுவாக இருந்தாலும் ஸ்ட்ராபெர்ரி பழங்களின் இன்பமான சுவையை நீங்கள் இப்போது அனுபவிக்கலாம்.
Read in English: Here’s a secret hack to store your strawberries for a long time
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“