strengthen lungs and increase the oxygen level : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல காரணிகள் நம்மை அச்சமடைய செய்து கொண்டிருந்தாலும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதில் நாம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போதைய சூழலில், நம் உடலில் ஆக்சிஜன் இருப்பையும் உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க, நுரையீரல் நன்றாக செயல்படுவது அவசியம். நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் வடிகட்டப்பட்ட பின், உடலின் அனைத்து பகுதிகளையும் அடைகிறது. இதனால், நுரையீரலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
நமது உடலில் நுரையீரல் சரியாக வேலை செய்யாவிட்டால், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், புற்றுநோய், நிமோனியா, ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் ஏற்படக்கூடும். கொரோனா தொற்று நேரடியாக நுரையீரலை தாக்கும் என்பதால், சுவாசிப்பு திறன் குறைந்து, நமது உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும். இதனால், மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும். இதனால், செயற்கை சுவாசம் அவசியமாகிறது. தற்போதய கொரோனா தொற்று சூழலில் நமது நுரையீரலை வலுப்படுத்துவது இன்றியமையாததாகிறது. உங்கள் நுரையீரலை பலப்படுத்த உங்களுக்காக சில உணவுகளை பரிந்துரைத்துள்ளோம்.
மஞ்சள் :
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளதால், அனைத்து வகையான
தொற்றுநோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். தினமும் நீங்கள் தூக்கச் செல்லும் முன், மஞ்சள் பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். இதனுடன், நீங்கள் மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு, இஞ்சி மற்றும் துளசி ஆகியவற்றை கலந்து காபி தயாரித்து குடித்து வரலாம். இது, நுரையீரலை வலுவாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
பூண்டு :
வெள்ளைப் பூண்டில் ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை செறிந்து காணப்படுகின்றன. இதனால், பூண்டினை சாப்பிட்டு வர, நுரையீரலை வலுவாக வைத்திருக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை சாப்பிடலாம். உங்கள் உடல் சூடாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இரவில் பூண்டு சில பற்களையும், ஒரு கிராம்பையும் ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொண்டு வர, குளிர்ச்சி அடையும்.
தேன் :
தேன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேன் சாப்பிட்டு வர, நுரையீரல் வலுவடையும். தேனை காலையில் சூடான எலுமிச்சை நீரில் சேர்த்து பருகி வர, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். இது தவிர, காபியில் தேன் கலந்தும் சாப்பிடலாம்.
துளசி :
துளசி இலைகளில் அதிக அளவு பொட்டாசியம், இரும்பு, குளோரோபில் மெக்னீசியம், கரோட்டின் மற்றும் வைட்டமின்-சி ஆகியவை அதிகனாக உள்ளன, அவை, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 4-5 இலைகளை மென்று சாப்பிடலாம். இது தவிர, நீங்கள் கிலோய் மற்றும் துளசியின் ஆயுர்வேத காபியாக குடித்து வரலாம்.
அத்திப்பழம் :
அதிசயமான மருத்துவ நன்மைகளை அளிக்கும் பல சத்துகள் அத்திப்பழங்களில் காணப்படுகின்றன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை உட்கொள்வதால் நுரையீரலை வலிமையாக்கும். இதன் மூலம், இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil