பயிற்சியளிக்கப்படாத நாய்கள் கூட மனிதர்களை காப்பாற்றும்
Distress : பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 60 நாய்களில் 19 நாய்கள் மட்டுமே அந்த உணவை எடுத்து உண்டன. பெரும்பாலான நாய்கள் தங்கள் உரிமையாளர்களை மீட்பதில் கவனம் செலுத்தின.
Stress, coronvirus, lockdown, dogs, friend, untrained, dogs rescuing human beings, pet dogs, pet dogs reacting to distress, dog news, experiments with dogs and humans, indian express, indian express news
நாய்கள் மிகவும் நட்பாக பழகக் கூடியது, அழகானது என்று அவைகளைப் பற்றி தெரிந்த விஷயங்களுக்கு மத்தியில், நாய்கள் மிகவும் தீவிரமான விசுவாசியாகவும், தங்களது உரிமையாளருக்கு உற்ற நண்பராகவும் இருக்கும். ஒரு நாய், மனிதனின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யக் கூடியது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மன நலத்துடன் இருக்கவும், உடல் நலத்தை அவர்கள் பேணுவதற்கும் நாய்கள் உதவுகின்றன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்படி, மனிதர்கள் ஏதேனும் ஒரு துயரத்தில் இருந்தாலும் கூட அந்த வளர்ப்பு பிராணிகள் பயிற்சி பெற்றிருந்தாலும், பயிற்சி பெறாவிட்டாலும் கூட நாய்களால் மனிதர்களுக்கு உதவ முடியும் என்று தெரியவந்துள்ளது. ஏஎஸ்யு கேனைன் அறிவியல் கூட்டு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. எந்த ஒரு வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும், தமது நண்பனான மனிதனை காப்பாற்ற ஓடிவரும். தேவைப்படும் சூழல் எழுந்தால், அவர்கள் உயிரைக் கூட காப்பாற்றும்.
ஆராய்ச்சியின்போது, அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் ஜோஸ்வா வான் போரக் என்ற பட்டப்படிப்பு மாணவர், அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிளைவ் வைன் இருவரும் 60 நாய்கள் தங்கள் உரிமையாளர்களை பாதுகாப்பதற்கு தயாராக இருக்குமா என்ற இயல்பான புரிதலை பரிசோதிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த 60 நாய்களுக்கும் எந்த ஒரு பயிற்சியும் தரப்படவில்லை. பரிசோதனையின்போது, மனிதர்கள் ஒரு பெரிய பெட்டியில் ஒளிந்து கொண்டனர். அவர்களின் நாய்கள் எளிதாக கதவைத் திறக்கும் வகையில் குறைவான எடைகொண்ட கதவால் மூடப்பட்டனர். பெட்டியில் மறைந்திருந்தவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டது போல போலியாக உதவி கேட்டு கதறினர். அப்போது மூன்றில் ஒரு பகுதி நாய்கள் தங்கள் உரிமையாளர்களை காப்பாற்றின.அதற்கு முன்பாக, நாய்களின் உரிமையாளர்களிடம் நாய்களின் பெயர்களை சொல்லி அழைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. நாய்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஹெல்ப் என்று மட்டும் சத்தமிட வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விஷயங்களை கருத்தில் கொண்டதாகச் சொல்கின்றனர்; 1. நாய்கள், தங்களது உரிமையாளர்களுக்கு உதவும் விருப்பம் கொண்டவை. 2. உதவி தேவைப்படும் சமயத்தில், அந்த இயல்பை அவை எப்படி புரிந்து கொள்ளும். எனினும், ஆராய்ச்சியாளர்கள் நாய்கள் பார்க்கும் வகையில் பெட்டியில் கொஞ்சம் உணவையும் போட்டு வைத்திருந்தனர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 60 நாய்களில் 19 நாய்கள் மட்டுமே அந்த உணவை எடுத்து உண்டன. பெரும்பாலான நாய்கள் தங்கள் உரிமையாளர்களை மீட்பதில் கவனம் செலுத்தின.
இன்னொரு பரிசோதனையில், பெட்டியில் உட்கார்ந்திருக்கும் உரிமையாளர்கள் ஒரு பத்திரிகையை வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது அவர்களின் குரலைப் புரிந்து கொண்டு 60-ல் 16 நாய்கள் பெட்டிகளின் கதவுகளைத் திறந்தன. வெறுமனே பத்திரிகையை படித்தபோது மட்டுமின்றி, உரிமையாளர்கள் ஆபத்து என்று குரல் கொடுத்தபோது அதிக நாய்கள் தங்கள் உரிமையாளர்களை காப்பாற்ற முன் வந்தன. உரிமையாளர்களை மீட்கும் போது வெறுமனே அவர்கள் அருகில் இருக்க வேண்டும் என்று நாய்கள் நினைக்கவில்லை. எப்போது தங்களது உரிமையாளர்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என்பதை அவைகள் புரிந்து கொள்கின்றன. “சூழ்நிலை ஏற்படும்போது எப்படி அவர்களை மீட்க வேண்டும் என்று வெறுமனே அவைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் போதுமானது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil