Advertisment

பருவ வயதினருக்கு மனஅழுத்த மேலாண்மை குறிப்புகள்

Stress management teenager : கோவிட் போன்ற சூழலை எதிர்கொள்வது சில நேரங்களில் சவாலானதாக இருக்கலாம். சில நேரங்களில் சமூக வலைதளங்களிலிருந்து இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, உங்களுக்காக நேரத்தை செலவிடலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stress management teenager, teenage stress, parenting tips for teenager stress. parenting, how to manage stress teenage

stress management teenager, teenage stress, parenting tips for teenager stress. parenting, how to manage stress teenage

42 சதவீதத்திற்கும் மேற்பட்ட பருவ வயதினருக்கு, அவர்களுக்கு மனஅழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதிலிருந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை.

Advertisment

கவுரவ் தியாகி, கட்டுரையாளர்

மனஅழுத்தம், பயம் போன்ற உணர்வுகள் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அது அதிகமாகச் செல்லும்போதுதான் பிரச்னை ஏற்பட்டு, கவலையளிக்கிறது. அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. டீன் ஏஜ் என்று அழைக்கப்படும் பருவவயது குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்துவதற்கான காரணங்கள், அவர்கள் எதிர்காலம் பற்றியது மற்றும் அந்த வயதில் அவர்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படுவதாகும். மன அழுத்தத்திற்கான மற்ற காரணங்களாக, பள்ளி, எதிர்மறை எண்ணங்கள், உடல் நலப்பிரச்னைகள், பியர் பிரஷர் எனப்படும் சக வயதுடையவர்கள் ஏற்படுத்தும் அழுத்தம், பெற்றோர் தனித்திருப்பது, குடும்ப எதிர்பார்ப்புகள்,பொருளாதார பிரச்னைகள், நண்பர்கள் மற்றும் உறவுகளால் ஏற்படுத்தப்படும் ஏமாற்றம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

பருவவயதினர் தனிமையை உணர்வார்கள், குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து பிரிந்து இருப்பதுபோல் உணர்வார்கள். அந்த உணர்வும் இந்த வயதில் இயல்பானதே. நமது உடல் அழுத்தத்தை உணரும்போது, இதில் உணர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அழுத்தங்கள், நாம் தனிமையை உணர்வதை மட்டும் செய்யாது. அது பதற்றக்கோளாறு, மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள், தங்ளையே வருத்திக்கொள்வது மற்றும் ஆளுமை கோளாறு உள்ளிட்ட பல்வேறு உளவியல் பிரச்னைகளை ஏற்படுத்தும். பருவ வயதினர் அடிக்கடி அழுதத்தை உணர்வதற்கு, இந்தவயதில் ஏற்படும் உடல் மற்றும் மன வளர்ச்சியுடன், தங்கள் வாழ்வில் வரும் எண்ணற்ற மாற்றங்ளால் காரமாகும். இன்றைய அதிவிரைவான தொழில்நுட்பம் உலகம் உதவாது. பதற்றம் மற்றும் மனஅழுத்தம் பருவ வயதினர் மற்றும் இளம் வயதினரிடம் அதிகரித்துள்ளது கோவிட் தொற்று காலத்தில் தெரியவருகிறது. அண்மை ஆய்வின்படி 2020ம் ஆண்டில் கொரோனா தொற்றால், மனஅழுத்தம் ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 நாள் ஊரடங்கில், உளவியல் உதவி வேண்டி வரும் அழைப்புகள் இளம் குழந்தைகளிடம் இருந்து அதிகம் வந்துள்ளது. இது வழக்கத்தைவிட 50 சதவீதம் உயர்வானதாகும். ஆரம்ப நிலையில், அவர்களுக்கு மனஅழுத்தம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை. நிறைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அழுத்தத்தை குறைக்கிறது

பெரியவர்கள் தனியாக உணர்ந்தாலும் அல்லது அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும், அவர்கள் ஒரு புன்னகையை முகத்தில் காட்டி, மற்ற உணர்வுகளை மறைத்துவிடுவார்கள். ஆனால் பருவ வயதினர் அதில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். கடைசியாக அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணுவார்கள். மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தால், பாதிக்கப்பட்ட இளம் வயதினர் நாள் முழுவதும் தங்கள் அறைகளுக்குள்ளே அடங்கிக்கிடப்பார்கள். அவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகமாட்டார்கள். எனவே பருவ வயதினருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை வேண்டும். நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக உறங்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். இவை அவர்களுக்கு நேர்மறையாக சிந்திப்பதற்கு உதவும். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது மனஅழுதத்திற்கான சிறந்த வடிகாலாகும்.

மனஅழுத்தத்தை சமாளிப்பது

42 சதவீதத்திற்கும் மேற்பட்ட பருவ வயதினருக்கு, அவர்களுக்கு மனஅழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதிலிருந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த முக்கியமான தருணத்தில் அவர்களுக்கு பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுகிறது. பெற்றோராக அவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பின்னர் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்களை கவனிக்க வேண்டும். மற்றவர்களின் துணை இருக்கும்போது, பிரச்னைகளில் இருந்து வெளியேறுவது நமக்கு எளிதாகும். மற்றவர்களுடன் பேசுவது நல்ல தீர்வாகும். பருவ வயதினர் அவர்கள் பெற்றோர் அல்லது நண்பர்கள் அல்லது அவர்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் பேசும்போது, அவர்களுக்கு தங்கள் மன அழுத்தத்தை கையாள்வதற்கு புதிய வழிகள் கிடைக்கும். இதனுடன், பெற்றோரும் தங்கள் குழந்தைகளை தன்னம்பிக்கையுள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களுடைய பிரச்னைகளை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்வியில் இருந்து எவ்வாறு மீள்வது ஆகியவற்றை விளக்கவேண்டும். அவற்றை கண்டு அஞ்சாமல் எதிர்கொள்வது எப்படி என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அவர்களின் பலம் மற்றும் திறன் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.

உதவக்கூடிய சிந்தனை மட்டுமே தேவை

நாம் நம்மைப்பற்றி எவ்வாறு நினைக்கிறோம் மற்றும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் நம் மன அழுத்தத்திற்கு காரணம். பருவ வயதினர், பெரியவர்களைப்போல், எதற்கும் உதவாத சிந்தனைகளை வளர்த்துக்கொள்வார்கள். அதுவும், மனஅழுதத்தை கையாள்வதில் சிக்கலை ஏற்படுத்தும். எதற்கும் உதவாத அல்லது அதிகமாக சிந்திப்பது, பருவ வயதினரிடம் கட்டுப்படுத்த முடியாமல் செல்லலாம். எல்லாவற்றைப்பற்றியும் சிந்திப்பது தவறாக போகலாம். மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற சிந்தனையே தவறானது. நீங்கள் தோல்வியாளர் போன்ற எதிர்மறை சிந்தனைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் தோன்றும். இதுபோன்ற சிந்தனை உள்ளவர்களை கையாள்வதற்கு அவர்களுடன் பேசவேண்டும் அல்லது அவர்களுக்கு, ஆலோசகர் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை வழங்க வேண்டும்.

தியானம்

தற்போது உள்ள கோவிட் போன்ற சூழலை எதிர்கொள்வது சில நேரங்களில் சவாலானதாக இருக்கலாம். சில நேரங்களில் சமூக வலைதளங்களிலிருந்து இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, உங்களுக்காக நேரத்தை செலவிடலாம். நமது மனதை அமைதிப்படுத்த பல விஷயங்கள் உள்ளன. அதற்கு தியானம் சிறந்தது. அது உங்கள் மனம் மற்றும் ஆத்மாவை அமைதிப்படுத்தி, எதிர்மறை சிந்தனைகளை உங்கள் மனதில் இருந்து எடுத்துவிடுகிறது. இது நமது கவனத்தை அதிகரிக்கவும், பதற்றத்திலிருந்து விடுபடவும் சிறந்த வழி. தியானம் செய்வது மட்டும் முக்கியமல்ல, மற்ற ஏதேனும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். உடல் ரீதியான செயல்பாடுகளான யோகா, நடைப்பயிற்சி, ஓட்டம் அல்லது விளையாட்டு போன்றவைகூட சிறந்த வழிகள்தான். மனஅழுத்ததில் இருந்து வெளியேறும் வழிகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம்.

இக்கட்டுரையை எழுதியவர் எதிர்கால வழிகாட்டி நிறுவனம் ஒன்றின் இயக்குனர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment