/tamil-ie/media/media_files/uploads/2020/03/b7.jpg)
நீங்கள் ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக வாழலாம். உங்களுக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கலாம். உங்கள் பொருளாதார சுமைகளை பகிர்ந்துகொள்ளலாம். துணிகளை முறைவைத்து மாற்றி துவைத்துக்கொள்ளலாம். ஆனாலும் சில நேரங்களில் நீங்கள் ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம்.
ஒரு நம்பிக்கையான இணையர் ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. அதுவே நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கான திறவுகோலாகவும் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான உறவுமுறை வாழ்க்கையை நீண்டகாலம் அழைத்துச்செல்ல உதவும்.
ஆசிட் வீச்சுக்கு பிறகு சீறி எழுந்த சிங்கப் பெண்: நெகிழ்வை உருவாக்கிய சேனல் அனுபவம்
நீங்கள் ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக வாழலாம். உங்களுக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கலாம். உங்கள் பொருளாதார சுமைகளை பகிர்ந்துகொள்ளலாம். துணிகளை முறைவைத்து மாற்றி துவைத்துக்கொள்ளலாம். ஆனாலும் சில நேரங்களில் ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம். உங்கள் உறவு எந்த சிக்கலுமின்றி சென்றுகொண்டிருந்தாலும், சில நேரங்களில் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதற்காக இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அது உங்கள் பிணைப்பை வளர்ப்பதுடன், ஆரோக்கியமான தொடர்பை மேம்படுத்தும்.
முக்கிய முடிவுகளை சேர்ந்தே எடுங்கள்
பொதுவான திட்டங்கள், முடிவுகள், அணுகுமுறையையே பெரும்பாலும் கடைபிடியுங்கள். அது உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன், அது உங்கள் உறவில் எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்று மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம், நீங்கள் அவர் மீது அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் இணையர் உணரும்படி நடந்துகொள்ளுங்கள் என்று லத்திகா நரங் என்ற மனநல நிபுணர் அறிவுறுத்துகிறார்.
வாழ்வின் கடுமையான கட்டங்கள் மற்றும் ஏமாற்றங்கள் எல்லாமே உறவின் ஒரு பகுதிதான்
எந்த உறவும் புனிதமான உறவு கிடையாது. எல்லோரும் 100 சதவீதம் சரியானவர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவரிடமும் சில குறைகள் இருக்கும். உங்கள் உறவின் சிறந்த காலகட்டங்களில் கவனம் செலுத்துங்கள். அதை அடிக்கடி எண்ணிப்பாருங்கள். உங்கள் கனவு கோட்டைகளை சிறிய பிரச்னைகள் சிதைத்துவிட அனுமதிக்காதீர்கள். அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைந்துவிடுங்கள். அவற்றை மனதில் போட்டு காயமாக்கி, சீழ்பிடிக்க விடாதீர்கள். நீங்கள் விரக்தியடைந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அறிந்து, இருவரும் அமர்ந்து பேசி, நீங்கள் இருவரும் எந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆலோசனை செய்யுங்கள். தோல்வி, அதிருப்தி ஆகியவை ஆரோக்கியமான, நீண்ட கால உறவுமுறையின் ஒரு பகுதிதான் என்பதை இரண்டு பேரும் புரிந்தகொள்ள வேண்டும். உங்களின் முன் உள்ள ஒவ்வொரு சவாலும், உங்களை தனியாகவும், குழுவாகவும் வளர்த்தெடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வளர்வதற்கான வாய்ப்பு
உங்கள் தரப்பில் இருந்து உங்கள் உறவு எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பீடு செய்து பாருங்கள். நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளவும், நல்ல உரையாடலை ஊக்குவிக்கவும் ஆலோசனை ஒரு சிறந்த வழிமுறையாக இருந்தாலும், நீங்கள்தான் உங்கள் இணையருடன் எப்படி நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒரு தனிமனிதராக நன்றாக வளர்ச்சியடைவீர்கள். உங்களின் கண்காணிப்பாளராக இருங்கள். அது உங்கள் உறவுமுறையை நன்றாக வளர்த்தெடுக்கும் ஆயுதமாகும் என்று நரங் பரிந்துரை செய்கிறார்.
மாற்றம் ஒன்றே மாறாதது
நல்லதோ, கெட்டதோ மாற்றம் ஒன்றே நிலையானது. எப்போதும் மாற்றம் உங்கள் இருவர் வாழ்க்கையையும் வளர்த்தெடுக்க உதவும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் பார்ப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், உடனடியாக உங்கள் இணையருடன் பேசிவிட்டு, விரும்பத்தகாதவை குறித்து பரிசோதித்து பாருங்கள்.
உங்கள் இணையரை மரியாதையுடன் நடத்துங்கள்
ஒரு ஒழுக்கமான, நீடித்த உறவுமுறையை பேணுவதற்கு நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களை குறைத்து மதிப்பிடும் கருத்துகள், அவதூறுகள் மற்றும் அவர்களை புண்படுத்தும் விமர்சன கருத்துக்களை அவர்கள் மீது கூறாதீர்கள். ஒரு சிறந்த உறவுமுறைக்கு உதாரணம் ஒருவரையொருவர் கண்ணியமாக நடத்துவதுதான். எல்லா சூழ்நிலைகளிலும் அன்பையே விதையுங்கள்.
தமிழில் : R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.