ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, காலையில் காபி குடிப்பதை குறைப்பது அதிக நன்மைகளைத் தரும் எனக் கூறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஆய்வுக் குழு, முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஆய்வில் மக்களை தொடர்ந்து கண்காணித்தது.
"இது காபி குடிக்கும் நேர முறைகள் மற்றும் ஆரோக்கிய விளைவுகளை சோதிக்கும் முதல் ஆய்வு ஆகும். நாங்கள் பொதுவாக எங்கள் உணவு வழிகாட்டுதலில் நேரத்தைப் பற்றி ஆலோசனை வழங்குவதில்லை, ஆனால் எதிர்காலத்தில் இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்று முன்னணி எழுத்தாளர் டாக்டர் லு குய் கூறினார்.
40,725 பேர் வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 வகையான மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலை நேரத்தில் (அதிகாலை 4 மணி முதல் 11:59 மணி வரை) மற்றும் நாள் முழுவதும் (மதியம் 12 மணி முதல் 4:59 மணி வரை) மற்றும் (மாலை 5 மணி முதல் அதிகாலை 3:59 மணி வரை) என ஆய்வு செய்யயப்பட்டது.
ஏறக்குறைய 10 வருடங்களின் சராசரி பின்தொடர்தல் காலத்தின் முடிவில், காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது காலையில் காபி குடிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும், அவர்கள் இதய நோயால் இறந்ததற்கான வாய்ப்பு 31% குறைவாக இருந்தது. காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, நாள் முழுவதும் காபி குடிப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தில் எந்தக் குறைவும் இல்லை.
"எங்கள் கண்டுபிடிப்புகள், காலையில் காபி குடிப்பது, பிற்காலத்தில் காபி குடிப்பதை விட குறைவான இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்ததுது,
காபி உட்கொள்ளும் அளவுகளுக்கு இடையேயான நேரத்தைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.