டைப் 2 நீரிழிவு பற்றிய ஆய்வை மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ரோஜர் இ ஹென்ரிக்சன் மற்றும் அவரது சகாக்கள் நடத்தினர்.
ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை உள்ளிட்டவை நீரீழிவு நோயிக்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த நிலையில், டயபெடிக்லோஜியா (Diabetologia) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆராய்ச்சியில், “தனிமை ஒரு நபருக்கு, டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisment
தனிமை, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Diabetologia, நீரிழிவு நோய் பற்றிய ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐரோப்பிய சங்கத்தின் மாதாந்திர அதிகாரப்பூர்வ இதழாகும். இந்த ஆய்வில் மொத்தம் 24,024 பேர் கலந்து கொண்டனர், இதில் பங்கேற்றவர்களில் 1,179 பேர் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயாளிகளில் 13% பேர் தனிமையை அனுபவிப்பதாக தெரிவித்தனர். ஆய்வில் பங்கேற்றவர்கள் 1995-2019 ஆண்டுகளுக்கு இடையே பிறந்தவர்கள் ஆவார்கள்.
தனிமை, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Advertisment
Advertisements
இந்த ஆய்வு, உளவியல் மன அழுத்தம் மற்றும் ஒரு நபரின் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, தனிமை ஒரு நீண்டகால துயர நிலையை உருவாக்குகிறது, இது உளவியல் அழுத்த நிலையை செயல்படுத்துகிறது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அதிகரிப்பால் ஏற்படும் தற்காலிக இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக டைப் 2 நீரிழிவு நோய் உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடலில் இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், தனிமையின் காரணமாக நமது உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு, அதிகப் பசியை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்றும் டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
தனிமை, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ரோஜர் இ ஹென்ரிக்சன் மற்றும் அவரது சகாக்கள் நடத்தினர். அப்போது மன அழுத்தமும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது என்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆராய்ச்சியாளர்கள், “தனிமை மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு இடையிலான தொடர்பை மேலும் நிறுவக்கூடிய காரணங்களைக் கண்டறிய கூடுதல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். டைப் 2 நீரிழிவு நோயுடன் தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய ஒரு ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“