ஒரு முறை இப்படி வெங்காய சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள். சைடிஷ் தேவையில்லை, உடல் எடை குறைய உதவும்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ கோதுமை மாவு
அரை ஸ்பூன் சக்கரை
1 ஸ்பூன் எண்ணெய்
2 வெங்காயம் நறுக்கியது
3 பச்சை மிளகாய் நறுக்கியது
1 ஸ்பூன் மிளாய் தூள்
கால் ஸ்பூன் மல்லித் தூள்
கால் ஸ்பூன் சோம்புத் தூள்
1 ஸ்பூன் சீரகம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை :
கோதுமை மாவில், உப்பு, சர்க்கரை சேர்த்துகொள்ளுங்கள். அதை தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள் சீரகம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தற்போது கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொண்டு, அதில் வெங்காய கலவையை வைக்க வேண்டும். மாவை மூடி, மெதுவாக சப்பாத்தியாக தேய்க்கவும். தொடர்ந்து அதை எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும். இதுபோல எல்லா உருண்டைகளையும் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“