யூரிக் ஆசிட் பிரச்சனையால் குதிகால் வலி... அரிசி கழுவிய தண்ணி வச்சு நொடியில் தீர்வு: பகிரும் டாக்டர்

மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் கூறியபடி, வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு இயற்கை முறையினால், குதிகால் வலியை கட்டுப்படுத்த முடியும். அதற்காக நாம் பயனப்படுத்தவேண்டியது — அரிசி கழுவிய தண்ணீர்.

மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் கூறியபடி, வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு இயற்கை முறையினால், குதிகால் வலியை கட்டுப்படுத்த முடியும். அதற்காக நாம் பயனப்படுத்தவேண்டியது — அரிசி கழுவிய தண்ணீர்.

author-image
Mona Pachake
New Update
download (17)

காலையில் எழுந்தவுடன் குதிகால் பகுதியில் திடீரென வலியால் நடக்க முடியாமல் இருப்பதா? வேலை செய்யும்போது காலில் வலியால் சிரமப்படுகிறீர்களா? இந்த வலி சாதாரணமாக தோன்றலாம் என்று நினைத்தாலும், பலருக்கு இது நாளந்தோறும் இருக்கும் சங்கடமான பிரச்சனையாக மாறி வருகிறது.

Advertisment

இந்த பிரச்சனையின் காரணங்களையும், அதற்கான இயற்கையான தீர்வையும் மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், “தற்போது நிறைய பேர் குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு பொதுவான நிலையாயினும், சில முக்கிய காரணிகள் இதற்கு பின்னணியாக இருக்கின்றன” என்றார்.

rice water

குதிகால் வலிக்கான முக்கிய காரணிகள்:

  • உடல் எடை அதிகமாக இருப்பது
  • நீண்ட நேரம் நின்று வேலை செய்வது
  • புதிதாக உடற்பயிற்சி ஆரம்பிப்பது
  • திடீரென உடலின் மேல்அழுத்தம் அதிகரிப்பது
  • யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருப்பது

“சில சமயங்களில், குறிப்பாக காலை நேரத்தில் எழும் போது இந்த வலி அதிகமாகக் காணப்படும்,” என்றும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

அரிசி கழுவிய தண்ணியால் இயற்கையான தீர்வு!

மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் கூறியபடி, வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு இயற்கை முறையினால், குதிகால் வலியை கட்டுப்படுத்த முடியும். அதற்காக நாம் பயனப்படுத்தவேண்டியது — அரிசி கழுவிய தண்ணீர்.

தேவையான பொருட்கள்:

ஒரு நாள் பழைய அரிசி கழுவிய தண்ணீர் (புளிக்க வைத்தது)
சுக்குப் பொடி – 1 ஸ்பூன்
ஓமம் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கல் உப்பு – ஒரு கைப்பிடி

dry ginger

செய்முறை:

  1. அரிசி கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால் அது புளிக்கும்.
  2. அடுத்த நாள் காலை, அந்த புளித்த தண்ணீரில் மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
  3. இந்த கலவையை லேசாக சூடுபடுத்தவும் (தீவிரமாகக் கொதிக்க வேண்டாம்).
  4. இரவு தூங்கச் செல்லும் முன், இந்த சூடான கலவையில் குதிகாலை சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பலன்கள்:

  • முதலில் வலி குறைய ஆரம்பிக்கும்.
  • தொடர்ந்து பயன்படுத்தும் போது, யூரிக் ஆசிட் படிந்திருக்கும் பகுதி குறையும்.
  • கால்கள் நன்கு ஓய்வெடுக்கும்.
  • இரவிலும் நல்ல தூக்கத்தை உறுதி செய்யும்.

feet

“குதிகால் வலிக்கு உடனடி தீர்வாக மருந்துகளை மட்டும் நம்புவது நல்லதல்ல. இயற்கையான வழிகளில் வலியை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும், உடல் எடையை கட்டுப்படுத்துவது, சீரான உடற்பயிற்சி, அதிக நேரம் நின்று பணியாற்றாமல் இடைவெளி கொடுப்பது போன்ற சுலபமான பழக்க வழக்கங்களும் முக்கியம்,” என்று மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் கூறினார். 

குதிகால் வலி என்பது பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதற்கான தீர்வு எளிமையாகவே இருக்கலாம். வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய அரிசி கழுவிய தண்ணி, இயற்கையான மூலிகைப் பொருட்கள் மற்றும் தினசரி ஓய்வுத் தந்திரங்கள் — இவை அனைத்தும் சேர்ந்தாலே வலி குறைந்து, நடக்கவும் சிரமம் ஏற்படாமல் இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: