சர்க்கரை நோய்யை கட்டுக்குள் வைக்க நாம் மாத்திரைகளை எடுத்துகொள்வது முக்கியமாகிறது. இந்நிலையில் சில ஆயுர்வேத முறைபடி நாம் சில விஷயங்களை செய்ய முடியும். இந்நிலையில் நாம் சிலவற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பாகற்காய் சாறு இது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இதை நாம் வெறும் வயிற்றில் குடித்தால், சர்க்கரை அளவு குறையும். இதுபோல நெல்லிக்காய் சாறை நாம் வெறும் வயிற்றில் குடிக்கலாம் இதில் வைட்டமின் சி உள்ளது. இது நமது ரத்த சர்க்கரையை சீராக்கும்.
இதுபோல வெந்தய விதைகளில் ஹைபோகிளைசிமிக் தன்மை உள்ளது. ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, அடுத்த நாள் வடிகட்டி அதை குடிக்க வேண்டும்.
இதுபோல காற்றாழை சாறும் இன்சுலின் செயல்படுத்துதலை ஊக்குவிக்கும். இந்நிலையில் இதை நாம் தனியாக எடுத்து கொள்ளும்போது, குறைவாக எடுத்துகொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“