நம் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த கெட்ட நாட்களில் ஒன்றை கொண்டிருந்தால், சில லைஃப் ஹேக்ஸ் இங்கே உள்ளன, அவை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஒரு மென்மையான அனுபவமாக மாற்ற உதவும்.
சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அதே நேரம் சர்க்கரை மூலம் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, இது உங்களுக்கு நிறைய நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்தும்.
கறை நீங்க
வெளிர் நிற ஆடையை அணிந்து புல் மீது அமர்ந்தால் என்ன ஆகும்? கடினமான பச்சை நிற கறை உங்கள் உடையில் படிந்துவிடும். சரி, இப்போது நீங்கள் இந்த கறைகளை ஒரு நொடியில் அகற்றலாம்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் செய்து, பின்னர் அதை கறையின் மீது தடவவும். குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் வைக்கவும், அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக துவைக்கலாம். கறை மறைந்துவிடும்.
ஃபேஸ் ஸ்க்ரப்
நீங்கள் தோல் பராமரிப்புக்கும் சர்க்கரை பயன்படுத்த முடியும். எப்படி என்று யோசிக்கிறீர்களா? சிறிதளவு சர்க்கரையுடன், ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து, பின்னர் அதை ஸ்க்ரப் போல முகத்தில் தடவவும். இது துளைகளை அவிழ்த்து உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.
உதடு மிருதுவாக
நிச்சயமாக, உங்கள் உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டுமெனில், சர்க்கரையைப் பயன்படுத்தி இயற்கையான ஸ்க்ரப் செய்யலாம். சிறிது தேங்காய் மற்றும் புதினா எண்ணெயை எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவினால், மிருதுவாக இருக்கும்
காய்கறிகளை வேகவைக்க
பட்டாணி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனால் அவற்றில் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
கேக் சேமிக்க
தங்கள் கேக் மற்றும் குக்கீகளை குறிப்பிட்ட காலத்திற்கு சுவைக்க விரும்புபவர்கள், ஃபிரிட்ஜில் சேமிக்கும் போது சில க்யூப்ஸ் சர்க்கரையைச் சேர்க்கவும், இதனால் அவற்றின் ஆயுள் நீட்டிக்கும், அவை முன்பு போல சுவையாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“