/indian-express-tamil/media/media_files/2025/01/25/dChrNfN5YN57Y06IM9SG.jpg)
இளநீரில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இளநீர் அதிக அளவில் சர்க்கரையை அதிகரிக்காது என்றாலும் ஏற்கெனவே சர்க்கரை அதிக அளவில் இருந்தால் இளநீர் குடிக்க வேண்டாம்.
சர்க்கரை எவ்வளவு கசப்பானது என்று சர்க்கரை நோயாளிகளைக் கேட்டுப் பாருங்கள். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற சந்தேகங்கள் வந்துவிடும். ஏனென்றால், ரத்தச் சர்க்கரை அளவு கூடிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் சோர்வாக இருக்கும்போது, வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாமா என்ற ஐயம் இருக்கிறது. சர்க்கரை அளவைக் சாப்பிட்ட பிறகு, 110-140 வரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் கால் லிட்ட இளநீர் குடிக்கலாம், ஆனால், அதனுடன் ஃபைபர் சத்துக்களைக் கொண்ட பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளையும் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இளநீரில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இளநீர் அதிக அளவில் சர்க்கரையை அதிகரிக்காது என்றாலும் ஏற்கெனவே சர்க்கரை அதிக அளவில் இருந்தால் இளநீர் குடிக்க வேண்டாம். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்றால், மருத்துவர் ஆலோசனையுடன் 250 மி.லி இளநீர் குடிக்கலாம். வெறும் இளநீர் மட்டும் குடிக்காமல், இளநீர் குடிக்கும்போது, நார்ச்சத்துகளைக் கொண்ட பாதாம், பிஸ்தா, பூசணி விதை, ஆலிவ் விதை போன்ற பருப்புகளை சாப்பிட வேண்டும். அப்போதுதான், இளநீர் குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தாது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
அதே போல, சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இளநீர் குடிக்கக் கூடாது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். மேலும், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் இளநீர் குடியுங்கள் என்று கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.