suja varunee baby suja varunee husband : பிக் பாஸ் சுஜா வருணி, சிவாஜி கணேஷனின் பேரன் சிவாஜி தேவ்-வை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணம் ஆகும்.
தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இவர், வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுத்திருந்தாலும் போட்டிகளில் வைல்டான சண்டைக்கோழியாகவே மாறிவிடுவார். ஆரம்பத்தில் சுஜா வருணி ஓவியா போல் நடந்துக் கொள்வதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. ஆனால். அதன் பின்பு ரசிகர்கள் சுஜா வருணியை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
பிக் பாஸ் முடிந்த சில மாதங்கள் கழித்து சுஜா திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணம் நடக்க மிக முக்கிய காரணம், நடிகர் கமல்ஹாசன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
திருமணம் முடிந்து சில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு சுஜா வருணி சிம்ஹா என்று பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அப்படியே சினிமாவில் இருந்து ஒதுங்கிய சுஜா இப்ப ஃபவரெட் மனைவி மட்டுமில்லை பொறுப்பான அம்மாவும் கூட.
தனது மகனுடன் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சுஜா இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லை சில மதர் உட் டிப்ஸ்களையும் வழங்கி கலக்குகிறார். சுஜாவின் தந்தை பற்றி அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை உருக்கமாக பதிவு செய்திருந்தார்.சிவாஜி தேவ், சுஜாவின் குடும்பத்தையும் தன் குடும்பம் போலவே சிறப்பாகவும் அக்கறையுடனும் கவனித்து வருகிறார். தனது காதல கணவன் குறித்து அனைத்து இடத்திலும் சுஜா பூரிப்புடனே பதிவு செய்து வருகிறார்.