60 வயசுனு சொன்னா யார் நம்புவா? ப்யூட்டி சீக்ரெட் பகிரும் பாடகி சுஜாதா
பல வருடங்களாக தனது குரலால் நம் மனதைக் கவர்ந்தவர், தனது இளமையான தோற்றத்தாலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். அவரது சரும பராமரிப்பு மற்றும் அழகு ரகசியங்களை, ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
பல வருடங்களாக தனது குரலால் நம் மனதைக் கவர்ந்தவர், தனது இளமையான தோற்றத்தாலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். அவரது சரும பராமரிப்பு மற்றும் அழகு ரகசியங்களை, ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
மேக்கப் போடுவதற்கு முன்பு சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம். நமது சருமம் நல்ல நிலையில் இல்லையென்றால், எந்த வகையான மேக்கப் பயன்படுத்தினாலும் அது சரியாக செட் ஆகாது. சருமத்தை நல்ல நிலையில் பராமரிக்க, சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசிங் அவசியம்.
Advertisment
அதிலும் குறிப்பாக சினிமா, இசை என கலையுலகில் இருப்பவர்களுக்கு அழகு என்பது மிகவும் முக்கியம். மேக்கப், ஹேர் ஸ்டைல் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இந்த வகையில், தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகி சுஜாதா மோகன், தனது இளமையான தோற்றத்தின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
"இப்போது வைட்டமின் சி சீரம் நிறைய கிடைக்கிறது. முன்பு அவ்வளவாகக் கிடைக்காது. இப்போது நான் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துகிறேன். அது சருமத்திற்கு நல்லது. இந்த வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஓர் இறுக்கமான விளைவு கிடைக்கும். அதன் பிறகுதான் நான் மேக்கப் போடுகிறேன்”.
Advertisment
Advertisements
மேக்கப்பைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் என்று இல்லை என்கிறார் சுஜாதா. "கொஞ்சம் நல்ல பிராண்டில் ஏதேனும் ஒரு ஃபவுண்டேஷன் பயன்படுத்தி, அதன் மேல் ப்ளஷ் ஆன் போடுவேன். இப்போதெல்லாம் எல்லோரும் ஐலாஷஸ் போடுகிறார்கள், ஆனால் எனக்கு அது போடத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சித்தேன். வேறு யாராவது போட்டுவிட்டால் தான் தெரியும். ஐப்ரோஸ், மஸ்காரா பயன்படுத்துவேன். ஐப்ரோஸ் செட் செய்வேன். அதன்பிறகு லிப்ஸ்டிக் தான். இதுதான் என்னுடைய பேசிக் மேக்கப்,". என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் சுஜாதா.