கண்களுக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப ரொம்ப தேவை- சுஜிதா தனுஷ் ஸ்கின் கேர்

எப்போவும் குளிச்சதுக்கு அப்புறம், தூங்குறதுக்கு முன்னாடி ஒரு 20 நிமிஷம் சரும பராமரிப்புக்கு நீங்க ஒதுக்கணும்.

எப்போவும் குளிச்சதுக்கு அப்புறம், தூங்குறதுக்கு முன்னாடி ஒரு 20 நிமிஷம் சரும பராமரிப்புக்கு நீங்க ஒதுக்கணும்.

author-image
WebDesk
New Update
Sujitha Dhanush

Sujitha Dhanush

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ்.

Advertisment

கதைகேளு கதைகேளுஎனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். இப்போது சுஜிதாவுக்கு 40 வயதாகிறது. ஆனால் இன்றும் அதே இளமையுடன், பொலிவுடனும் அழகாக இருக்கிறார்.

சுஜிதா தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து ஒருமுறை தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
Advertisements

ஓவர் நைட்ல எந்த பலனுமே கிடைக்காது, நீங்க வாழ்க்கை முழுக்க தொடர்ந்து பண்ணும்போதுதான் அதுக்கான ரிசல்ட் ஒரு 2-3 மாசத்துல தெரியும்.

எப்போவும் குளிச்சதுக்கு அப்புறம், தூங்குறதுக்கு முன்னாடி ஒரு 20 நிமிஷம் சரும பராமரிப்புக்கு நீங்க ஒதுக்கணும்.

நான் பச்சை தண்ணீர்ல தான் ஃபேஸ் வாஷ் பண்ணுவேன். ஃபேஸ் வாஷ் மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். உடம்புக்கு போடுறதுலாம் முகத்துக்கு போடக்கூடாது. சுடுதண்ணில குளிச்சாலும், முகத்துக்கு எப்போதுமே பச்சை தண்ணீர்தான். அப்புறம் க்ளென்சர் போட்டு முகத்தை நல்ல மசாஜ் பண்ணனும், பிறகு ஒரு நல்ல காட்டன் துணிய நனைச்சு,  க்ளென்சர் மேல தேய்க்கும்போது நம்ம முகத்துல இருக்கிற துளைகள் ஓபன் ஆயிடும்.

ஆன்டி-ஆக்ஸிடன் வைட்டமின் சி சீரம் யூஸ் பண்ணனும். வைட்டமின் சி சீரம்’ 4-5 டிராப்ஸ் எடுத்துமுகத்துல அப்ளை பண்ணுங்க. இதுக்கு பிறகு அண்டர் ஐ கீரிம், கண்ணுக்கு கீழே நல்ல தடவுங்க. கண்களை சுத்தி இருக்கிற தோல் ரொம்ப சென்சிட்டிவ். உங்களுக்கு வயசாகுதானா முதல் அறிகுறி கண்களுக்கு கீழே தான் தெரியும். அதுக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப ரொம்ப தேவை.

View this post on Instagram

A post shared by Sujithar (@sujithadhanush)                                                                                                   

முகத்துல சீரம் செட் ஆன உடனே, மாய்ஸ்சரைசர் போடுவேன். இது சருமத்தை ஹைட்டிரேட் செய்ஞ்சு, மிருதுவாக்கும். உங்க முகம், கை, கால் எல்லா இடத்துலயும் காலை, இரவு கண்டிப்பா மாய்ஸ்சரைசர் போடுங்க..

நான் மாய்ஸ்சரைசர் அப்ளை பண்ண பிறகு ஒரு 5-10 நிமிஷம் அப்படியே விட்டுருவேன். நம்ம போட்டிருக்கிற சீரம், ஐ கீரிம், மாய்ஸ்சரைசரை நம்ம சருமம் நல்ல உறிஞ்சதுக்கு அப்புறம், கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பா சன் ஸ்கீரின் லோஷன் யூஸ் பண்ணுவேன். இதேதான் இரவும் நான் பண்ணுவேன். மாய்ஸ்சரைசர் இரண்டு லேயர் அப்ளை பண்ணுவேன். ஆனா சன்ஸ்கீரின் போடமாட்டேன். ஓவர்நைட்ல சருமம் பளபளப்பாகுது. இதை தொடர்ந்து பண்ணுங்க, கண்டிப்பா உங்க சருமம் ஆரோக்கியமா இருக்கும் என்று முடிக்கிறார் சுஜிதா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: