விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து’ தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ். தனத்தை போல ஒரு மருமகள் வேண்டும் என்று நினைக்கும் மாமியார்களும், அவரை போல ஒரு அண்ணி, அக்கா வேண்டுமென நினைக்கும் இளம்பெண்களும் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.
இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா தனுஷ், சமீபத்தில் விளம்பர இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
சுஜிதா’ தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக’ தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தன் அண்ணன் சூர்யா கிரண் (நடிகர் மற்றும் இயக்குனர்) காரணமாகத்தான் சுஜிதாவுக்கு’ சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்’ சீரியலா அல்லது சினிமாவா என்ற ஒரு நிலை வந்தபோது’ சுஜிதா சீரியலைத் தேர்ந்தெடுத்தார். பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வருகிறார்.
சுஜிதாவின் சினிமா வாழ்க்கை அவரை அறியாமலே தொடங்கிவிட்டது. பிறந்த 41 நாட்களிலே, சுஜிதா கேமிரா முன் தோன்ற ஆரம்பித்துவிட்டார்.
பல படங்களில் பணியாற்றிய சுஜிதா, 1987 மற்றும் 1988ல் ஆந்திராவில் 2 முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியிடம் இருந்தும் விருது வாங்கியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அவரது பயணம் பல சிறப்புத் தருணங்களால் நிறைந்தது.
சுஜிதா முன்பே சொன்னது போல அவரது அண்னன் சூர்யா கிரண் ஒரு குழந்தை நட்சத்திரம், அவர் சுஜிதாவை விட 8 வயது மூத்தவர். அண்ணன் குழந்தை நட்சத்திரமாக இருந்ததால், படப்பிடிப்பின் போது அவரது அம்மாவும் உடன் வருவார்.
அப்போது பிறந்த சில நாட்களே ஆன’ சுஜிதாவையும் அவரது அம்மா ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு எடுத்துச் செல்வார்.
சுஜிதாவின் பெற்றோருக்கும், சினிமா துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதையும் மீறி சுஜிதாவின் அண்ணன் சினிமாவில் புகழ் பெற்றார், தேசிய விருதும் கூட வாங்கினார். அப்படி ஒரு சூழ்நிலையில், சுஜிதாவுக்கு கிடைத்த வாய்ப்பை நிராகரிக்க அவர் அம்மா விரும்பவில்லை. இப்படித்தான்’ சுஜிதாவுக்கு’ பிறந்து 41 நாட்களே இருக்கும் போது சினிமாவில் தோன்ற வாய்ப்பு கிடைத்தது.
ஒருமுறை பத்திரிக்கை பேட்டியின் போது’ சுஜிதாவிடம் சின்னத்திரையிலும்,, வெள்ளித்திரையிலும் நடிக்கும்போது ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் திரைப்படங்கள் பொதுத் தேர்வுகள் போலவும், சீரியல்கள் பருவத் தேர்வுகள் போலவும் இருப்பதாக நான் உணர்கிறேன். இருப்பினும்’ நான் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிற்கும் ஒரே மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறேன என்று கூறினார்.
மேலும் அவரது குடும்பம் பற்றி பேசுகையில்’ என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே. திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரண்டு விதமாக குடும்பங்களை பார்க்கிறேன். எனது குழந்தை பருவத்திலேயே எனது தந்தை காலமானார். ஆனால்’ என் அண்ணன்’ என்னை ஒரு தந்தை போல் கவனித்துக் கொண்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகு, என் கணவரும், குழந்தையும் என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டனர். இப்போது, என் கணவரின் குடும்பத்தையும் சேர்த்து, எனக்கு ஒரு பெரிய குடும்பம் கிடைத்துள்ளது என்று சுஜிதா அந்த பேட்டியின் போது பெருமையாக கூறினார்.
சீரியலில் பிஸியாக இருக்கும் சுஜிதா தன் கணவர், குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாவில் பகிர்வார். அப்படி அவர் பகிர்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்று’ இப்போது சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “