Advertisment

சுஜிதாவை செப் ஆப் தி வீக் வாங்க வைத்த ரெசிபி: உலவச்சாறு சிக்கன் பிரியாணி

குக்வித் கோமாளியில் சுஜிதா, செய்த உலவச்சாறு சிக்கன் பிரியாணிக்கு, அவருக்கு சிறந்த குக் பாராட்டு கிடைத்தது. இதை நீங்களும் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasasa

குக்வித் கோமாளியில் சுஜிதா, செய்த உலவச்சாறு சிக்கன் பிரியாணிக்கு, அவருக்கு சிறந்த குக் பாராட்டு கிடைத்தது. இதை நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்

1 கிலோ சிக்கன் 

1 ½ ஸ்பூன் கரம் மசாலா

2 ஸ்பூன் மல்லித்தூள்

2 ஸ்பூன் மிளகாய் தூள்

2 ஸ்பூன் இஞ்சி- பூண்டு பேஸ்ட் 

வறுத்த வெங்காயம் 2 கை பிடி அளவு 

வறுக்கப் பயன்படுத்திய எண்ணெய் 2 ஸ்பூன் 

8 பச்சை மிளகாய் 

1 கப் தயிர்

அரை எலிமிச்சை சாறு 

உப்பு 

1 கப் கொள்ளு 

அரை கிலோ அரிசி

1 சிட்டிகை குங்குமப் பூ

3 ஸ்பூன் எண்ணெய் 

அரை ஸ்பூன் சீரகப் போடி 

உப்பு 

சின்ன அளவு புளி 

கொஞ்சம் வெல்லம் 

1 வெங்காயம் 

1 கொத்து கருவேப்பிலை 

2 பட்டை , 2 ஏலக்காய், 2 கிராம், கடல் பாசி, 2 பிரியாணி இலை 

செய்முறை : சிக்கனை நன்றாக கழுவ வேண்டும். அதில் மஞ்சள் போட்டு மீண்டும் கழுவ வேண்டும். கழுவிய சிக்கனில், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய் பொடி, இஞ்சி -பூண்டு பேஸ்ட், வறுத்த வெங்காயம், வறுத்த எண்ணெய் , உப்பு சேர்த்து கலந்து வைத்துகொள்ளவும். கொள்ளை 8 விசில் விட்டு வேக வைத்து, அதன் தண்ணீரை வடிகட்ட வேண்டும். தொடர்ந்து ஒரு கை பிடி கொள்ளை அரைத்துகொள்ளவும். அரைத்ததை கொள்ளு சாறில் இதை சேர்க்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் பட்டை , கிராம்பு, சீரகம், பிரியாணி இலை, கடல் பாசி, சீரகம் சேர்த்து, அதில் அரிசியை சேர்க்கவும்.  அரிசியை பாதி வரை வெந்ததும். சிக்கனை குக்கரில் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் , வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் கொள்ளு சாறை சேர்த்து சீரகப் பொடி, மிளகாய் பொடி, புளி கரைத்தது சேர்த்து கிளரவும். இந்நிலையில் ஒரு பெரிய பிரியாணி பாத்திரத்தை வைத்து அதில் முதலில் சிக்கனை சேர்த்து கொள்ளவும். மேலாக  கொள்ளு சாறை சேர்க்கவும். அதிற்கு மேலாக பாதி வெந்த அரிசி, பொறித்த வெங்காயம், நெய் சேர்க்கவும். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து வைத்து அதை மூடி போட்டு மூடி. அதற்கு மேகாக கனமான எடை கொண்ட சப்பாத்திக் கல்லை வைக்கவும். அதிக தீயில் 10 நிமிடம், மிதமான தீயில் 10 நிமிடம். மிகவும் தீயை குறை வைத்து ஒரு 10 நிமிடம் விட்டு எடுதால் சுவையான பிரியாணி ரெடி 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment